மணப்பாறை ஸ்பெஷல்

மணப்பாறை முறுக்கு நான் பல புத்தகம் பற்றி,பல செய்திகள் பற்றி எழுதிருந்தாலும், நான் பிறந்து வளர்ந்த ஊரை பத்தி எழுத முடியாதது சிறு குறையா எனக்கு இருந்தது.இன்னக்கி எங்க ஊர் Special திண்பண்டம் முறுக்கு.அதோட பெருமைய நான் பெருமையா எழுதுறேன். என்னாதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், நொறுக்குத் தீனி இல்லாவிட்டா பெரும்பாலோனோர் தவித்துப் போய்விடுவார்கள். நம் நாட்டில இந்த நொறுக்குத் தீனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது முறுக்குதான். அப்படி பட்ட முறுக்கு என்ற உடனே மொரு மொரு என்றும் அதன் மனமும் அனைவருக்கும் நினைவு வந்துவிடும், காரணம் முறுக்கு என்பது இந்திய மக்களின் ஒரு பாரம்பரியநொறுக்கு தீனி என்பதை யாராலும் மறுக்க இயலாது.இத்தகைய சிறப்பை பெற்ற முறுக்கு பல ஊர்களில் பலவிதமாக தயாரிக்கப்பட்டாலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு உலக அளவில் இன்றும் பிரபலமாக உள்ளது என்பது அனைவரும் தெரிந்ததே. மணப்பாறையில் 1930ஆம் ஆண்டுகளில் இம் முறுக்கு தயாரிக்கும் தொழிலானது அறிமுகம் ஆனது. இன்றும் பல குடும்ப மக்கள் இதை பிரதான குடிசை தொழிலாக இங்கு செய்து...