Posts

Showing posts from 2021

ஆன்டன் செகாவ் சிறுகதைகள்

Image
ஆன்டன் செகாவ் சிறுகதைகள் ஒரு அழகான கிராமம், ஒரு தனிப்பட்ட தேசம், அப்படி இப்படி என ஒரு அலட்டல் இல்லாத கதைகளம்.   உப்புச்சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை இவ்வளவு சுவாரசியமாக எந்த எழுத்தாளராலும் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் செகாவ் தனக்கேயுரிய மாறுபட்டக் கோணத்தில் அணுகியிருப்பதை அவருடைய கதைகளில் அறியலாம். செக்காவின் கதையுலகில் உள்ள மனிதர்கள், நம்மைப் போல் சராசரியானவர்கள்.அவர்கள் விசித்திரமானவர்கள், வினோதமானவர்கள்.சமூகத்தில் வாழும் சில விளம்பர பிரியர்களை போல் இல்லாமல் தனிமையில் வாழ்பவர்கள்.  வெளியில் புலப்படாத மனித மனத்தின் நற்குணங்கள், பலவீனங்கள், கசடுகள், வன்மங்கள், ஏக்கங்கள், துயரங்கள், எதிர்பார்ப்புகள் எனப் பல்வேறு அம்சங்களை கதையில் விவரிப்பதுடன் மனிதனின் கீழ்மைப் பண்புகளுக்குக் காரணமான சமூகத்தை விமர்சிக்கவும் தயங்குவதில்லை. செகாவின் கதைகளை வாசிப்பவர், ஏதாவது ஒரு கட்டத்தில் தனக்குள்ளாகவோ, தன்னை மீறி வாய்விட்டோ சிரித்துவிடுவர். ஏனெனில், செகாவின் எழுத்து நடையில், நகைச்சுவை இயல்பாகக் கலந்திருக்கும். தன் கருத்துக்களைத் த

கடல் புறா – இரண்டாம் பாகம்

Image
  கடல் புறா – இரண்டாம் பாகம்   பரபரப்பாக முடிந்த கடல்புறா பாகம் ஒன்று  வாசித்து முடித்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் இரண்டாம் பாகத்தை வாசிக்க எடுத்தேன். இடையில் நிறைய புத்தகங்கள் வாசித்தாலும், கடல்புறா பாகம் 1 கதையின் தாக்கம் மனதில் இருந்து கொண்டுதான் இருந்தது. ஆசிரியர் சாண்டில்யனை பற்றி நிறையவே எடுத்துக் கூறலாம். அவரின் எழுத்து நடை, நாவலில் அமைத்த காட்சிகளின் விதம், குறைவான கதாபாத்திரங்களை கொண்டு அவர் கதையை புரியும்படியும் தெளிவாகவும் காட்சி அமைப்பில் ஏற்படும் சிறு அசைவுகளையும் நயத்துடன் எடுத்துரைப்பார். தமிழ் எழுத்தாளர்களின் மிகச்சிறந்தகளில் ஒருவர்.கடல் புறா இரண்டாம் பாகத்தின் கதையை சற்று அலசினால், கடல்புறா என்னும் போர் கப்பல் உருவாக்கப்படுவதும், கொள்ளையர்களை போர் வீரர்களாக்கி அக்ஷய முனையை தன் வசப்படுத்துவதுதான் இரண்டாம் பாகம்.ஆனால் போர் காட்சிகளோ,சாகச காட்சிகளோ இல்லை.பெரும் திருப்பங்களோடு பயணிக்கும்.   பாலூர் பெருந்துறையில் இருந்து தப்பிய இளைய பல்லவன், சீன கடற்கொள்ளையன் அகூதாவிடம் ஒரு வருட காலம் பயிற்சி மேற்கொள்கிறார். அவருடன் அமீர், கண்டியத் தேவன், சேத்தன் ஆகியோரும

கோடுகள் இல்லாத வரைபடம்

Image
பயணத்தின் வழி உலகை பார்ப்பது தனி சுகம் தான். புத்தகத்தில் மார்கோ போலோ, வாஸ்கோடகாமா,யுவாங் சுவாங்,அல்பெருனி,லுடோவிக் ஹப்லர்,சதீஸ்குமார்,என நீண்டு கொண்டு ஒரு பயணம் போலவே செல்கிறது. பயணம் என்பது நோக்கம் சார்ந்து ஒன்று.   நோக்கம் இல்லாமல் ஒரு பறவையை போல அல்லது ஒரு துறவி போல ஒன்று என கூறலாம்.ஆனால் உண்மையில் பயணம்  இரண்டும் கலந்த விஷயம் தான். பயணம் மூலம் நாடுபிடித்து அங்கு தன்னுடைய அதிகாரத்தை நிறுவ முயற்சி செய்த அல்பெர்க் மற்றும் வாஸ்கோடகாமா செய்த பயணம் ஒரு வகை. அறிவு மற்றும் ஞானத்தை விரும்பி யுவன் சுவாங்,அல்பெருனி போன்றவர்கள் செய்த பயணம் மற்றொரு வகை. அது மட்டும் இல்லாமல் சாகசமாய் வடதுருவவத்திற்கு செல்வது, எவெர்ஸ்ட் க்கு செல்வது ஒரு வகை பயணம். நடந்து அல்லது லிப்ட் கேட்டு சென்ற லுடோவிக் ஹப்லர் போன்றவர்களும் பயணம் செய்த வகை உண்டு. அதிக தூர பயணங்கள் நான் சில முறை செய்ததுண்டு. இருசக்கர வாகன பயணமாக நான் சென்றதுண்டு. நெடுசாலை வழி பணி சார்ந்த நிமித்தமாக நான் செல்லும் போது சாலையில் இருசக்கர வாகனம் மூலம் நெடுந்தூரம் பயணம் செய்வார்கள் நிறைய பேரை பார்த்ததுண்டு. இன்றைய காலகட்டத்தில் அவர்களை பார்க்கு

பெத்தவன்

Image
பெத்தவன் - இமையம் பெண்ணைப் பெத்தவனின் பார்வையில் கதை நகர்கிறது. தவமிருந்து இருபது வருடங்களுக்குப் பிறகு பழனிக்கு பாக்கியம் பிறக்கிறாள். பாக்கியத்திற்கு பிறகு செல்வராணி.  பாக்கியம் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் பொழுது கீழ் சாதியைச் சேர்ந்த பெரியசாமியை காதலிக்கிறாள். இதை ஊரார் மூலம் அறிந்து கொள்கிறான் பழனி. பாக்கியத்தையும் கண்டிக்கிறார். தேர்வுக்கு மட்டுமே அனுமதிக்கிறார்கள். சில நாட்களிலேயே திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது  முதல் முறையாகத்  தற்கொலைக்கு முயற்சிக்கிறாள் பாக்கியம். இரண்டாவது முறை பாக்கியத்தை பற்றி பழனி வேறு ஒருவர் மூலமாக கேள்விப்படும் பொழுது  மீண்டும் கண்டிப்பு, மீண்டும் ஒரு திருமண ஏற்பாடு இரண்டாவது முறையும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். இவர்களின் காதலுக்கு அந்த ஊரில் இருக்கும் ஒரே உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பழனியிடம் அவர்கள்  அவன் மகளை கொன்று விடச் சொல்கிறார்கள். ஒருமுறை பிரச்சினை அதிகமாகி பாக்கியத்தின் வாயில் ஊரார்கள் சாணியை கரைத்து ஊற்றி தகாத வார்த்தைகளால் பேசி தலை முடியையும் அறுத்து விடுகிறார்கள். இவ்வளவு கொடும

வாழ்க வாழ்க

Image
வாழ்க வாழ்க - இமையம்் " என் உயிரினும் உயிரான,உடலினும் உடலான,என் உயிர் மூச்சினும் மேலான வாக்காளப் பெருங்குடி மக்களே,(மக்களால் நான், மக்களுக்காக நான்) பிரதான கழகத்தின் கூட்டத்திற்கு மக்களை அழைத்து செல்ல ஆட்களை சேர்க்கின்றனர்.அதில் பேரனின் மருத்துவ செலவுக்காக  உள்ளூர் கட்சி பிரமுகர் வெங்கடேச பெருமாளிடம் பணம் பெற்றுக் கொண்டு கட்சி கூட்டத்திற்கு வருகிறாள் ஆண்டாள்.அவளோடு  கண்ணகி,சொர்ணம் என தெரு மக்கள் புறப்பட்டு பிரதான கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு செல்கின்றனர். அங்கு திடலில்  பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது.ஹெலிகாப்டரில் பத்து மணிக்கு வர வேண்டிய தலைவி வருவதற்கு தாமதமாகவே,மக்கள் கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை அரசியல் பின்னணியோடு, அவர்க்கே உரித்தான  மொழிநடையோடு அற்புதமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் இமையம். நாவலில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் அப்பெரும் கூட்டத்தில் சேரில் அமர்ந்து இருப்பதை கண்ட மூன்று உயர் சாதி பெண்கள் அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த  முயன்றபோது, அப்பெண் "ஓட்டு போட நான் வேணும்! சேர்ல மட்டும் உட்காரக்கூடாதா ?" என கேட்கும் கேள்விகள் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட

ஆத்தங்கரை ஓரம்

Image
  இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சிந்தூர். நதிக் கரையோரம் அமைந்திருக்கும் பல கிராமத்திற்கு  அணைக்கட்டு வடிவில் ஆபத்து வருகிறது. பிறந்து, வளர்ந்த தாய் மண்ணைப் பிரியமனமில்லாமல், கோவிந்த் பாயி அவரது மகன் சிமன் தலைமையில் அந்த கிராம பழங்குடி மக்கள் அனைவரும் அரசை எதிர்த்து, எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.3,20,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த படுகிறது. அதுவும் அணைகட்டானது சித்தூருக்கு பத்து கிலோமீட்டருக்கு முன்னால் லக்ஷ்மன் நகரப் பகுதிகள் தான் அணைகள் கட்டுவதற்கு முற்றிலும் ஏற்றதாக இருக்கும். ஆனால் அந்த குடியிருப்பு பகுதிகள் மாநிலத்தின் முக்கிய வர்த்தகர்கள், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் அவருடைய அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைய இருக்கும் பகுதிகள். அதனால் 10 கிலோ மீட்டருக்கு தள்ளி பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த அணை வருகின்றது. சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள் சீரழிந்து போகும் என்பதால், சமுக ஆர்வலர்கள் ராதா, சந்தீப், நிதின், அரசு அதிகாரி சுதிர் அவரது மனைவி யூதிகா ஆகியோர் அணைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர். அரசை எதிர்த்துப் போராடி, அப்பாவி மக்கள் வெற்றி

கடல் புறா- முதல் பாகம்

Image
        கடல் புறா - முதல் பாகம்  ஒரு நாவலை படிக்க இத்தனை நாட்கள் நான் எடுத்துக் கொண்டதில்லை. முதல் பாகத்தை முடிக்கவே அதிகப்படியான நாட்கள் கடந்து சென்றன.பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன்.   இவர் பிரபலமான  தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. வீரராஜேந்திர சோழன் காலத்தில்  கலிங்க- சோழர்களின் எல்லை விவகார சமயத்தில் நடக்கும் கதை. புகார் நகரத்திலிருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார். அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார்.கலிங்க படை தன்னை தூரத்தி கொண்டு வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவர