Posts

Showing posts from October, 2022

நகல்

Image
                                    நகல் மாலை நேரம் ஆகிவிட்டது. மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலனுக்கு இருட்டுவதற்குள் பாதுகாப்பாக தன் வீட்டை சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருந்தார்கள்.  கபிலனின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ,  பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. காரணம் அவன் இந்த பகுதியிலே வாழ்ந்து பழகியவன். ஹரிக்கு சற்று சிரம்மாகவே இருந்தது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும்,  மனதை மயக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும், நறுமணமும்,குளிர்ந்த காற்றும் அவ்வப்போது ஹரியை தாமதபடுத்தி கொண்டிருந்தன.  திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது.  உயரமான மரங்கள்.  மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி காணாததை கண்டவன் போல மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலனுடன் ஹரி நடந்து கொண்டிருந்தான்.  குளிர் காலம் என்பதால்,மாலை ஐந்து மணிக்கெல்லாம் பனி சூழ தொடங்கி, இருட்ட ஆரம்பித்தது.சற்று ந

தண்ணீர்

Image
அசோகமித்திரன் அவர்களின் "தண்ணீர்" நாவல்  வாசிக்க ஆர்வம் ஏற்பட்டு,புத்தகம் வாங்கி இன்று பயணத்தில் வாசிக்க தொடங்கினேன்.சில மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் நாவல். ஆனால் அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் கடக்கவிடாது. சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டு தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை தண்ணீர் பிரச்சனையோடு சேர்த்து கூறப்பட்டுள்ளது.  "யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை உருவாக்கம்" என்கின்றார் அசோகமித்திரன்.   சினிமா கதாநாயகியாகும் கனவுடன் வாழும் ஜமுனா.ஆசை நிராசையாகிறது. பாஸ்கர் என்பவரால் ஏமாற்றப்படுவது,சுற்றி இருக்கும் மனிதர்களால் ஒதுக்கவும் படுகிறாள். ராணுவத்தில் பணிபுரியும் கணவனை பிரிந்து பெண்களுக்கான விடுதியில் தங்கி, பல விதமான நெருக்கடியில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா.  நோய்வாய்ப்பட்ட கணவனுக்கும், வன்மத்தின் மறு உருவமான மாமியாருக்கும் இடையில் நம்பிக்கையின்றி மன உறுதியுடனும், விரக்தியுடனும் காலம் தள்ளும் டீச்சரம்மா. இவர்களின் வாழ்க்கை போராட்டத்தையும்,தண்ணீரோடு பொருத்தி நகரத்துகிறார். கதை ஒரு ஆரம்பம