Posts

Showing posts from June, 2020

கொங்கை

Image
மார்பக கதைகள் பலவற்றை படித்திருப்போம். சிலப்பதிகாரக் கண்ணகி தன் ஒரு பக்க மார்பை கிள்ளி எறிந்து மதுரையை எரித்தாள். புறநானூற்றுத் தாய், போரில் தன் மகன் முதுகில் குத்துபட்டு  இறந்திருந்தால், அவனுக்கு பால் கொடுத்த தனது மார்பகத்தை அறுத்து எரிவதாய் கூறுவாள். கருப்பினப் பெண் ஏலம் போன தன் மகன் பால் குடிக்க, தன் மார்பை அறுத்து கொடுத்து அனுப்புவாள். முலை வரி வசூலித்த திருவிதாங்கூர் மன்னனுக்கு, வரி கட்ட முடியாமல்,தன் முலையை அறுத்துக் கொடுத்த பெண். ஒரு ஈழப் பெண்களின் மார்புகளில் சிங்களவர்கள் அறுத்தது. சேரி பெண்கள் ஜாக்கெட் அணிந்தார்கள் என்பதற்காக சேரி பெண்களின் மார்புகளை அறுத்தது. இன்னும் எத்தனை எத்தனையோ. இது முலைகளைப் பற்றிய கதை என்பதால் பெண்களின் கதை என சொல்லிவிடமுடியாது. நம் தாய்மார்களின், சகோதரிகளின், கதை இது. முலை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே  ஒருவருக்கு பரிதாபமோ,வலியோ ஏற்படுகிறதோ! அவர்கள் நிச்சயமாக இந்த நாவலை  வாசித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும். ஆசிரியர் அண்டனூர் சுரா அவர்களின் முதல் நாவலை படிக்கிறேன். கதையின் கரு பெண்களை மையப்படுத்தியது ஆனால் எழுதியவர் ஆண். பெண்களின் உணர்வுக

எங்கதெ

Image
        வில்லிபுத்திர ஆழ்வார் எழுதிய மகாபாரதத்தில ஒரு வார்த்தை வரும்... "கணவனை இழந்த  அழகான மனைவி. இந்த சமுதாயத்தில் வாழ்வது, 'தோல் உரிக்கப்பட்ட மாமிசத்தை பருந்துகளிடமிருந்து காப்பது' போன்று", ஆனால் இந்த கதைபடி பருந்து மாமிசத்துக்கு ஆசைபட்டு மாட்டி வாழ்வை இழப்பது போன்ற கரு. ஆசிரியர் இமையம் அவர்களின் முந்தைய நாவல்,கதைகள் நான் புரட்டியதில்லை.அவரின் இந்த நாவல் எனக்கு புதிதுதான். இந்த நாவலில் முதல் பக்கம் வாசிக்கும் போதே கதையின் கரு தெரிஞ்சிடும். ஆனால் முழுமையாக படிக்காமல் புத்தகத்தை மூடி வைக்க முடியாது. புறக்கணிக்கவும் முடியாது. அவரின் எழுத்துக்கள் நம்மை 110 பக்கமும் பயணிக்க வைக்கும். ஊருக்குள்ள இட்டுக்கட்டி பேசறதும், கதை முழுக்க ஒரு தனிமனிதனின் புலம்பல். ஆனா அந்த புலம்பலை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த புலம்பல் நம்மை மேலும் மேலும் கதையில் பயணிக்க வைக்கிறது. சிக்கலான வார்த்தைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இல்லை. இழிவான வார்த்தைகள் என்று ஒதுக்கும் அளவுக்கும் இல்லை. முழுவதுமாக வாசிச்சது அப்பறம் கதையின் கரு மட்டும் மனசில நிற்கும். அதுதான