கொங்கை


மார்பக கதைகள் பலவற்றை படித்திருப்போம். சிலப்பதிகாரக் கண்ணகி தன் ஒரு பக்க மார்பை கிள்ளி எறிந்து மதுரையை எரித்தாள். புறநானூற்றுத் தாய், போரில் தன் மகன் முதுகில் குத்துபட்டு  இறந்திருந்தால், அவனுக்கு பால் கொடுத்த தனது மார்பகத்தை அறுத்து எரிவதாய் கூறுவாள். கருப்பினப் பெண் ஏலம் போன தன் மகன் பால் குடிக்க, தன் மார்பை அறுத்து கொடுத்து அனுப்புவாள். முலை வரி வசூலித்த திருவிதாங்கூர் மன்னனுக்கு, வரி கட்ட முடியாமல்,தன் முலையை அறுத்துக் கொடுத்த பெண். ஒரு ஈழப் பெண்களின் மார்புகளில் சிங்களவர்கள் அறுத்தது. சேரி பெண்கள் ஜாக்கெட் அணிந்தார்கள் என்பதற்காக சேரி பெண்களின் மார்புகளை அறுத்தது.
இன்னும் எத்தனை எத்தனையோ.
இது முலைகளைப் பற்றிய கதை என்பதால் பெண்களின் கதை என சொல்லிவிடமுடியாது. நம் தாய்மார்களின், சகோதரிகளின், கதை இது.
முலை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே  ஒருவருக்கு பரிதாபமோ,வலியோ ஏற்படுகிறதோ! அவர்கள் நிச்சயமாக இந்த நாவலை  வாசித்தவர்களாகத்தான்
இருக்கக்கூடும்.
ஆசிரியர் அண்டனூர் சுரா அவர்களின் முதல் நாவலை படிக்கிறேன். கதையின் கரு பெண்களை மையப்படுத்தியது ஆனால் எழுதியவர் ஆண். பெண்களின் உணர்வுகளை சரியாக புரிந்து, இதில் எழுதி இருக்கிறார்.
கணவன் தன் மனைவி சந்திரவை அழைத்து கொண்டு ஜிம்முக்கு செல்கிறார். இரண்டு குழந்தைகள் பெற்ற  40 வயதான தன் மனைவியின் உடல் எடையை குறைத்து, அவளுக்கு அழகு கூட்டுவதற்காக அழைத்துச் செல்கிறார். அவளின் உத்தரவு இல்லாமலே, அவளும் விருப்பம் இல்லாமலே உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறாள். "சிசேரியன் செய்த உடம்பு, எப்படி இது எல்லாம் தாங்கும்" அதுபற்றி கணவனுக்கு கவலை இல்லை. தன் மனைவி அழகாக இருக்க வேண்டும்.  எல்லாம் சரி, ஆனால் "மார்பக அளவு மட்டும் குறைந்து விடக்கூடாது" என நினைக்கும் கணவன். இப்படி தொடங்கும் சந்திரா டீச்சரின் கதை.அவரது மாணவி விமலா தாயை இழந்தவள். அப்பாவின் கவனிப்பில் வளர்கிறாள்.அப்பாவும் மறுதிருமணம் செய்யவில்லை. அவளது வீட்டில் பெண்களே இல்லை.9 வயதிலேயே, பெரியவாளாகி விடுகிறாள். அப்பாவின் கவனிப்பு தான்.தன்னுடைய சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள வீட்டில் பெண் இல்லையே என்ற கவலை அவளுக்கு. பதினோரு வயதிலேயே அவளின் மார்பகம் அகண்ட தோற்றமாகிவிடுகிறது. இதனால் தலை நிமிர்ந்து நடக்க, அச்சப்படுகிறாள். இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாக்கப்படுகிறாள். தன் பயன்படுத்தும் உள்ளாடைகளை தந்தையிடம் வாய் திறந்து கேட்க முடியாதபடியும், தன்னுடைய மார்பகத்தின் மீது ஊராரின் பார்வை, சக மாணவிகளின் பார்வை, ஆசிரியர்களின் பார்வை அவளை நரகவேதனைக்கு கொண்டு செல்கிறது. இளவட்ட பயல்களின் கேளிக்கு ஆளாகிறாள்.
சந்திரா டீச்சரிடம் மனம்விட்டுப் பேசுகிறாள். அவரின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை செய்ய முற்படுகிறாள். பிறகு அவரின் மூலம் ஜிம்மிற்கு செல்கிறாள்.  அங்கே அகண்ட மார்பகத்தைப் பார்த்து, "தன் கம்பெனி உள்ளாடைக்கு  மாடலாக வரியா அப்படின்னு" கேட்கிறார்கள். கூனி குறுகி அழுகிறாய். "11 வயதில் இப்படிப்பட்ட நிலைமை தனக்கு வேண்டாம்" என நினைத்து
ஆயிஷா நடராஜன் எழுதிய 'ஆயிஷா' என்ற கதையில் வருவது போல் தனக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக 'நைட்ரஸ் எத்தனால்' கரைசலை கொண்டு தன் மார்பகத்தில் செலுத்தி, மார்பகத்தை அறுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பயன்படுத்துகிறாள்.
தனது மார்பகத்தை வெட்டி விடுகிறாள். தன் செல்ல மகளின் மார்பகம் வெட்டி இருந்ததைப் பார்த்து அலறியடித்து தூக்கிச் செல்கிறார் தந்தை. வெட்டப்பட்ட மார்பகத்தில் ரத்தம் வடிகிறது.தன் மார்பை ரசித்தவருக்கும்,கேலி செய்த
இந்த ஊரரிடம் தன் வெட்டிய மார்பை  காண்பிக்கிறாள்.
இப்படியாக ஒட்டுமொத்தப் பெண்களோட வலிகளையும், மார்பகம் பெரிதாக இருக்கும் விமலாவின் கதைப்பயணத்தில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
நாவலை வாசித்து முடிக்கையில் சிலருக்கு பல கேள்விகள் எழலாம். சிலருக்கு படபடப்பு வரலாம். பலருக்கு கிளுகிளுப்பும் வரலாம். ஆனால் எனக்கு கதையை இன்னொரு முறை வாசிக்க தூண்டியது. பல கேள்வியும் மனதில் எழுந்தது.
மாட்டின் மடியில் ஊசி போட்டு பால் எடுப்பது.இதனால் மாட்டின் காம்பு பெரிதாக தெரிவதும்,அந்த ஊசியின் மருந்து வீரியம், அந்த பால் குடிக்கும் மனிதருக்கும் பாதிப்பு ஏற்படாதா ? என்ற கேள்விகள்.உதாரணமாக சொல்லலாம்.
ஒரு பெண்ணின் மார்பகத்தை பற்றிய வலியை உணரும் பெண்களே! அதை விமர்சிப்பதும், வசைபாடுவதும் இன்னும்
பெண்களைக் கூனிக்குறுக வைக்கிறது.
பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் ஏற்படும் உடல் மாற்றங்களை எப்படி அணுகுவது என்ற விழிப்புணர்வு பெண்களுக்கே இருப்பதில்லை. அவர்கள் வயதுக்கு வருவதற்கு தாமதமானால் அந்தப் பெண்ணைக் கண்டு அம்மாவே முகம்சுளித்துக் கொள்வதையும் இதில் கூறியிருக்கிறார்.
சமுதாயத்தில் பெண்களை கண்ணுக்கு கண் பார்த்து பேசும் ஆண்கள் குறைவுதான்.கேலிகளும்,கிண்டல்களும்
இதுக்கெல்லாம் மேல
பெண்களோட மார்பகத்தை பார்த்து" பால் பாக்கெட் ன்னு சொல்றதும்,எத்தனை லிட்டர் கறக்கலாம்ன்னு" சொல்றதும் வக்கிரம்.
ஆனால் இப்படி  பெண்களின் வலிகளைப் பற்றி பரிதாப படும்போது, WWE என்ற குத்து சண்டை உலகிலும்,சினிமா உலகிலும்,பேஷன் ஷோகளில்  பெண்கள் தன் மார்பகம் பெரிய தோற்றம் ஏற்பட மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்திகின்றனர்.
சில பெண்களே தங்கள் மார்பகங்களை பிற பெண்ணோடு "எது பெரியது" என ஒப்பிடும் அவலம் நடக்கிறது.
பெண்களின் உடல் உறுப்புகளைப் பற்றிய
ஒரு புரிதல் வரவேண்டும்.
சமூகத்தில் சக பெண்களை, ஆண்களும் உடல் ரீதியாக விமர்சிப்பதையோ தவிர்க்க வேண்டும். பெண்களே,மற்ற பெண்களை உடலுறுப்பு ரீதியாக உதாசினப்படுத்தமால் இருக்க வேண்டும்.

கார்த்திக் கிருபாகரன்

Comments

  1. பெண்கள் சமுதாயத்தில் ஒன்று தெய்வமாகப் போற்றப் படுகிறார்கள் அல்லது காலின் அடியில் இட்டு நசுக்கப் படுகிறார்கள்.இரண்டும் வேண்டாம்

    ReplyDelete
  2. பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவு . கடைசியில் சொல்லப்பட்ட கருத்து உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று .‌

    ReplyDelete

  3. பெண்களை மதிக்கும் இந்த சமூகத்தில்தான் அவளை போகப் பொருளாக பார்க்கும் அவலமும் ஏற்படுகிறது.

    ஒரு பெண் தன் உடல் அங்கங்களின் கேலியை பொறுக்க முடியாமல் உடல் அங்கத்தையே வெட்டியெடுக்கும் அளவிற்கு போக வைத்தது வேதனையான விஷயம்தான்.
    வலி நிறைந்த பதிவு.

    ReplyDelete
  4. Thelivaana
    mattrum
    Thunivaana
    pathivu
    Pagirapadavendiyavatrul ondru
    vaalthukkal anna👍

    ReplyDelete
  5. பெண்களின் மார்பகம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

    ReplyDelete
  6. பெண்மைக்கு அழகு மார்பகம்தான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் பட்சத்தில் எந்த பேச்சுக்கும் இடமில்லை மார்பகங்கள் இல்லாமல் இருக்கும் பெண்கள் ஏண்டா பெண்ணாக பிறந்தோம் என்ற மனஉழச்சலுக்கு ஆளாகிறாள் அளவுக்கு அதிகமாக மார்பகங்கள் கொண்ட பெண்களும் விமர்சனத்திற்கு ஆளாகும் போது மனவருத்தம் ஏற்படுகிறது எனவே இரண்டு வகையான பெண்களும் தனது அம்மா அக்கா தங்கை களாக நினைத்துப் பாருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்