வெண்ணிற இரவுகள்
வெண்ணிற இரவுகள்
பகலின் நீளம் கூடுகிறது. இரவின் நீளம் குறைகிறது. காரணம் காதல் மட்டுமே.
நான்கு நாள் இரவு, ஒரு பகலில் நடக்கும் இந்தக் காதல் போராட்டம்தான் கதை.
இரண்டு நபர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறான தளங்களில் வாழும் இரண்டு நபர்கள்.
இதில் கதாநாயகன் பெயரை கடைசிவரை குறிப்பிடவே இல்லை. ஆனால் கதை சொல்பவன் அவனே. அவனோ கனவு உலகத்திலேயே வாழும் கனவுலகவாதி.
கதாநாயகியின் பெயர் நாஸ்தென்கா. அவளோ தன் பாட்டியின் கண்டிப்பில் வளர்க்கிறாள். அந்தப் பாட்டி தன் ஆடையோடு அவள் ஆடையையும் சேர்த்து ஊக்கு குத்தி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தன் பிணைப்பில் அவளையும் வாழ வைக்கிறாள்.அதுவும் 15 வருட காலமாகவே.
முதல்நாள் இரவில் கதாநாயகனும், நாஸ்தென்காவும் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் மனம் விட்டு பேசுகிறார்கள். அவளை சந்தித்ததில் ஆனந்தக் கூத்தாடினான்.தன் கனவுலக கதையை அவளிடம் சொல்கிறான். முதல்நாள் சந்திப்பில் இரவுகள் நீளம் குறைந்தது அவனால் உணர முடிந்தது.
இரண்டாம் நாள் சந்திப்பு தொடர்ந்தது அப்போது நாஸ்தென்கா தன்னுடைய வாழ்க்கை கதையை அவனிடம் சொன்னாள்.
தன் சுகபோக இன்பங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அவள் வாழ்க்கையில் ஒருவன் வந்தான். அவன் அவள் வசிக்கும் வீட்டில் மாடியில் குடியேறுகிறான். சில சந்தர்ப்பங்களில் பாட்டி உடனான இவளது பிணைப்பு வாழ்க்கை பார்த்தவன் பரிதாப படுகிறான்.அவளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்கிறான். அவன் இல்லாமல் வாழ முடியாது என்கிற எண்ணம் இவளுக்கு தோன்றுகிறது. அதை அவனிடமே கூறுகிறாள். ஆனால் அவன் ஒரு வருடம் கழித்து நான் வருகிறேன் அப்போது இதே காதல் என் மீது உனக்கு இருந்தால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவன் சொல்கிறான். இவளும் காத்திருக்கலாம் என்று முடிவெடுத்து காத்திருக்கிறாள். இவ்வாறு நாஸ்தென்காவும் தன் கதையைக் கூறி முடிக்கிறாள். ஒரு வருடம் நிறைவானதையும் சொல்கிறாள். கதாநாயகனும் இவளுக்கு உதவி செய்வதாக ஒத்துக்கொள்கிறான்.
மூன்றாம் நாள் இரவு இருவரும் சந்திக்காமலே போய்விடுகிறார்கள். ஆனால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.இரவின் நீளம் அதிகமாக தெரிந்தது அப்போது அவனுக்கு.
நான்காம் நாள் இரவில் அவன் நாஸ்செத்தாவிடம் தன்னுடைய காதலை சொல்கிறான். ஆனால் அவளும் அதை ஏற்கிறாள்.அந்த நேரத்தில் அவள் காதலன் வந்து விடுகிறான். ஆனால் காத்திருந்த காதலே வேண்டும் என முடிவெடுத்து அவள் செல்கிறாள். இறுதியாக இவனை கட்டியணைத்து நன்றி சொல்லிவிட்டு செல்கிறாள்.
இந்த ஒரு நிமிசம் போதும் வாழ்வதற்கு என்று பெருமூச்சுவிடுகிறான் இந்த கனவுலகவாசி.
வெண்ணிற இரவுகள் நிராசையாகி போன முடிவில்லாத காதல்❤️
இந்த கதையை தழுவி தான் "இயற்கை" படம் தமிழ்சினிமாவில் வந்திருக்கும் என எண்ணுகிறேன்.
வெண்ணிற இரவுகள் நாவல் மிகச்சிறந்த காதல் நாவல்.
ஆசிரியர் தஸ்தாயெவ்ஸ்கி எழுத்துச் சுவை மாறாது தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் கிருஷ்ணையா.
இரவில் வாசித்து மனம் நெகிழ வைத்த இந்த வாசிப்பு முற்றும்...
📚
கார்த்திக் கிருபாகரன்
சிறப்பு!
ReplyDeleteநன்றி
Delete