சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்

சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்




       சினிமா மோகத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிப்போவதை கதைமூலமாக ஜேகே அவர்கள் தெளிவு படுத்துகிறார்.1975 க்கு முந்தைய காலகட்டங்களிலே கதைக்களம் அமைகிறது.

அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை என்று இரண்டில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்தவர் வாத்தியார் (எம்ஜிஆர்).அவரது மிக தீவிர ரசிகராக இருக்கிறார் ரிக்ஷா வண்டி ஓட்டும் செல்லமுத்து மற்றும் அவனது மனைவி சித்தாள் கம்சலை.புருஷன விட பொண்டாட்டி கம்சலை வாத்தியாருக்கு மிக தீவிர ரசிகை.வாத்தியார் படம் புதிதாக ரிலீஸ் ஆனால் தியேட்டரில் புருஷனுக்கு முன்னால் இவள் சென்று பார்ப்பாள். படம் பார்த்து அப்புடியே மயங்கிடுவாள்.படம் பார்க்கும் போது தியேட்டரில் பக்கத்தில் எவனாவது இவளினம் சில்மிஷம் பண்ணால்கூட இவளுக்கே தெரியாது.அவளோ மதிமயங்கி வாத்தியார் படத்தை ரசிப்பாள்.சரி படம் பாக்கும் போது ரசித்தால் பரவயில்லை.டீ கடையில் வாத்தியார் பட பாட்டு ஓடினால் கேட்டு ரசித்து கொண்டே நிற்கிறதும், சுவற்றில் வாத்தியார் போஸ்டர பாத்தால் முத்தம் கொடுக்கிறதும்,வாத்தியாரை நினைச்சுகிட்டே புருஷனோட வாழ்றதும்,வாத்தியார் முகம் போட்ட பனியன் புருஷன் போட்டுருந்தால், அப்போ அவள் ஆசையை அவன் மீது வெளிபடுத்துறதுன்னு இருந்தாள்.இதுமூலமா சினிமா,சினிமாகாரர் மேல பைத்தியமா இருந்த சமுதாயத்த கதை மூலமா சொல்லிருப்பார்கள்.
          
ஒருகட்டத்துல கம்சலையோட பைத்தியகார தனத்த புரிந்து கொள்கிறான் செல்லமுத்து.அவளை எங்கயும் போகவிடாமல்,வீட்டுக்குள்ளே இருக்குற மாதிரி கண்ரோல் பண்ணுறான். ஒரு மாசத்துக்கு அப்பறம் வாத்தியார் நடிச்ச  புதுப்படம் ரிலீஸ் ஆகுது.அவளுக்கு படம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறாள். ஆனால் படத்துக்கு போககூடாதுன்னு புருஷன் கண்டிசன்.இந்த சமயத்துல பக்கத்து வீட்டுகாரன் சிங்காரம் இவகிட்ட ஆசை வார்த்தை பேசி,"தெரிஞ்சவங்க மூலமா வாத்தியார் சூட்டிங்க்கு கூட்டிட்டு போறேன்.யாருக்கும் தெரியாம படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு" அவளை சீரழிக்கிறான்.சித்தாள் கம்சலை,செல்லமுத்து வாழ்க்கை என்னாச்சு ? மனது கனத்தை வெளிபடுத்துற விதமா கதையை முடிச்சிருப்பார் ஜேகே.
          
சினிமாக்குள்ள அரசியலையும்,
மக்களோட அறியாமைய பயன்படுத்திகிற சில நடிகர்கள்,
சினிமாவை சினிமாவா பார்க்காத மக்கள். இந்த எண்ணம் தான் தமிழ்நாட்டில் பிழைக்க வந்த சிலர் அரியனை ஏறினாங்க.சிலர் இப்ப அரியனை ஏற முயற்சியில் இருக்காங்க.
                         
சிலர் சொல்லி கேட்டுருக்கேன்.
"அந்தகாலத்தில் வாத்தியார் அடி வாங்குற சீன் வந்தப்ப உணர்ச்சிவசபட்டு ஒருத்தன் ஸ்கீரினை கிழிச்சான்" என்று.
"வாத்தியாரை அடிச்ச வில்லனை நேரில் எங்கயாவது பார்த்தால் கல் ஏறிவாங்க" என்றும்.இவ்வளவு அறியாமையுள்ள மனிதர்கள் இருந்ததை நினைத்தால் சிரிப்பும்,வேதனையும் தான் வருகிறது. "ஹீரோவை சினிமாவில் ரசிக்கிறதோட நிறுத்திக்கோ" என்று சிறு வயதில் அட்வைஸ் பண்ணிருக்காங்க.ஆனால் நம்ம தலைமுறை கொஞ்சம் முன்னேற்றபாதையில போகுது.ஏன்னா ! சினிமா ஹுரோகள்ல யார் பெரிய ஆள்ன்னு சண்டை போடுறது இப்ப அதிகம் பாக்க முடியுறதுல்ல.இனி வர காலம் பெரிய மாற்றம் உருவாகும்.நடிகர்கள் எல்லாம் சக மனிதனாவும்,எந்த ஒரு நாட்டு பிரச்சனைக்கும் அவர்களை முதன்மை படுத்தாத சமூகம் உருவாகும்.தமிழ்படம் பார்ட் 1& 2 அனைத்து முன்னனி நடிகர்கள் நடிப்பை,அவர்களின் படத்தை கிண்டலடித்து வந்திருந்தது.வரவேற்கதக்கது தான்.யாதர்த்த வாழ்க்கையை வேறு கோணத்தில் காட்டிய சினிமா படங்களின் முகதிரையை கிழித்தது இந்தபடம் தான்.புத்தகம் படிச்சப்ப கலைவாணர் சொன்னது நினைவு வந்தது."நாங்கள் சிரிப்பதும்,அழுவதும் மக்களாகிய உங்களுக்காக அல்ல.பணத்திற்காக".


ஜேகே எழுதிய இந்த புத்தகம் மனிதனின் யாதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.
                                  
கார்த்திக் கிருபாகரன்

Comments

Popular posts from this blog

ஆலமரம்