கடல் புறா – இரண்டாம் பாகம்

 

கடல் புறா இரண்டாம் பாகம்

 

பரபரப்பாக முடிந்த கடல்புறா பாகம் ஒன்று வாசித்து முடித்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் இரண்டாம் பாகத்தை வாசிக்க எடுத்தேன். இடையில் நிறைய புத்தகங்கள் வாசித்தாலும், கடல்புறா பாகம் 1 கதையின் தாக்கம் மனதில் இருந்து கொண்டுதான் இருந்தது. ஆசிரியர் சாண்டில்யனை பற்றி நிறையவே எடுத்துக் கூறலாம். அவரின் எழுத்து நடை, நாவலில் அமைத்த காட்சிகளின் விதம், குறைவான கதாபாத்திரங்களை கொண்டு அவர் கதையை புரியும்படியும் தெளிவாகவும் காட்சி அமைப்பில் ஏற்படும் சிறு அசைவுகளையும் நயத்துடன் எடுத்துரைப்பார். தமிழ் எழுத்தாளர்களின் மிகச்சிறந்தகளில் ஒருவர்.கடல் புறா இரண்டாம் பாகத்தின் கதையை சற்று அலசினால், கடல்புறா என்னும் போர் கப்பல் உருவாக்கப்படுவதும், கொள்ளையர்களை போர் வீரர்களாக்கி அக்ஷய முனையை தன் வசப்படுத்துவதுதான் இரண்டாம் பாகம்.ஆனால் போர் காட்சிகளோ,சாகச காட்சிகளோ இல்லை.பெரும் திருப்பங்களோடு பயணிக்கும்.

 

பாலூர் பெருந்துறையில் இருந்து தப்பிய இளைய பல்லவன், சீன கடற்கொள்ளையன் அகூதாவிடம் ஒரு வருட காலம் பயிற்சி மேற்கொள்கிறார். அவருடன் அமீர், கண்டியத் தேவன், சேத்தன் ஆகியோரும் உடன் இருக்கிறார்கள். ஒரு பெரும் திட்டம் தீட்டி வருகிறார்கள். அது விஜயராஜ்யத்தையும், கலிங்கத்தையும், கலிங்கத்தின் முக்கியமான கடல் துறைமுகத்தையும் அழிக்க ஒரு பெரும் பலம் தேவைப்படும். அதற்காக பெரும் படை திரட்டுவதற்காக அகூய முனையை அடைகிறார்கள்.தன் கப்பலின் பெரும் சேதத்தை சரி செய்வதற்காகவும், ஒரு பெரும் படை திரட்டுவதற்காக அங்கு வந்து சேர்கிறார்கள். அங்கு பூர்வ குடிகளும்,தமிழ் இனத்தவரும், கடற்கொள்ளையர்கள் வாழ்கிறார்கள்.அந்த நாட்டை பலவர்மன் ஆட்சி செய்து வருகிறான்.அவரின் மகள் மஞ்சளழகி. கொள்ளையர்களுக்கு தான் சேமித்து வைத்திருந்த நகைகளையும், நாணயங்களையும் பரிசாக அளித்து அவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார் இளைய பல்லவன்.அகூய முனையின் தலைவன் பலவர்மனிடம் 'நான் அகூதாவின் உபதளபதி என்னை கொபெரும் , அகூதா இந்த நாட்டையே அழித்து விடுவான்' என்று அவனை அச்சுறுத்தி அங்கேயே சில காலம் வசிக்கிறான் இளையபல்லவன்.அப்போது மஞ்சளழகியின் சந்திப்பு ஏற்படுகிறது. அவளுக்கு இளையபல்லவன் மேல் காதல் ஏற்படுகிறது. அந்த நாட்டில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று பெரும் திருவிழா நடைபெறும்.அதில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நால்வர்களும் அதில் கலந்து கொள்வார்கள். பலர் பங்கேற்கும் அந்த நிகழ்வில் நிச்சயம் ஒரு கோர சம்பவம் நடைபெறும் என்பது அந்த நாட்டினர் அனைவருக்கும் தெரியும். அந்த நால்வரும் அரக்கர்கள், நரமாமிசம் தின்பவர்கள் என எல்லோராலும் கூறுவார்கள். அந்த சித்ரா பௌர்ணமி திருவிழாவின்போது இளைய பல்லவனும், அமீரும் அதில் கலந்து கொள்கின்றனர். அதில் பெரும் அசம்பாவிதம் ஏற்படுகிறது. அந்த நால்வரில்  ஒருவன் இளைய பல்லவனால் கொல்லப்படுகிறான். அது பெரும் திருப்புமுனையாக அமைகிறது. விஜய சாம்ராஜியத்தை சேர்ந்தவர்கள் கோபம் கொண்டு தன் நாட்டை அழித்து விடுவார்கள். பூர்வகுடிகள் கடல்வழியாக உட்புகுந்து நாட்டை அழிப்பார்கள் என அச்சம் கொள்கிறார்கள். இதில் பலவர்மன் ஒரு பெரிய சூழ்ச்சி செய்கிறான். அந்த சூழ்ச்சியில் மஞ்சளழகியையும், இளைய பல்லவனும் சிக்கிக் கொள்கின்றனர். ஒரு திருப்பமாக பலவர்மன் மஞ்சளழகியின் தந்தை இல்லை என்பது தெரிய வருகிறது. பல வர்மனின் சூழ்ச்சியை முறியடிக்க களத்தில் இளைய பல்லவன் இறங்குகிறான். அந்த நாட்டிற்குள் சென்று தளபதியாகி, பல திட்டங்கள் தீட்டி,ஒரு மாபெரும் போர் கப்பலான கடல் புறாவை தயார் செய்கிறான்.

பின் இடும்பன் மற்றும் கொடியவர்களை அழித்து, அந்த நாட்டை காப்பாற்றி,இறுதியில் பலவர்மனையும் கைது செய்து அழைத்து செல்கிறான். மஞ்சளழகியை அரியாசனத்தில் அமர செய்து, அவளின் தந்தை விஜய சாம்ராஜ்யத்தின் ஜெயவர்மன் என்பதையும் தெரிவிக்கிறான்.அகூதாவோடு அடுத்த பயணத்தை மேற்கொள்வதோடு இந்த பாகம் நிறைவு பெறுகிறது.

படிக்கும் போது ஆங்காங்கே சலிப்பு தட்ட தொடங்கியது. ஆனாலும் சில பல திருப்பங்களுடன் கதை நகர்வதால் அந்த ஓட்டம் மேலும் வாசிக்க வைத்தது. சினிமா திரைப்படங்களில் ஒரு சில படங்கள் திரைக்கதை வேகமாக பயணிக்க வைக்கும் திடீரென வரும் ஒரு சில காட்சிகள் ஏன் என்று தெரியாது. அது பார்ப்பவர்களுக்கு ஒருவித சலிப்பை கொடுக்கும். அது போல எனக்கு இந்த இரண்டாம் பாகம் தோன்றியது.முதல் பாகத்தில் காஞ்சனா தேவியுடன் காதல்,இரண்டாம் பாகத்தில் மஞ்சளழகியுடன் காதல் என்று இளைய பல்லவன் காதல் பயணம்,ராஜ தந்திர பயணங்கள் தொடர்கிறது.

கார்த்திக் கிருபாகரன்



Comments

Popular posts from this blog

ஆலமரம்