கோடுகள் இல்லாத வரைபடம்

பயணத்தின் வழி உலகை பார்ப்பது தனி சுகம் தான். புத்தகத்தில் மார்கோ போலோ, வாஸ்கோடகாமா,யுவாங் சுவாங்,அல்பெருனி,லுடோவிக் ஹப்லர்,சதீஸ்குமார்,என நீண்டு கொண்டு ஒரு பயணம் போலவே செல்கிறது. பயணம் என்பது நோக்கம் சார்ந்து ஒன்று. நோக்கம் இல்லாமல் ஒரு பறவையை போல அல்லது ஒரு துறவி போல ஒன்று என கூறலாம்.ஆனால் உண்மையில் பயணம் இரண்டும் கலந்த விஷயம் தான். பயணம் மூலம் நாடுபிடித்து அங்கு தன்னுடைய அதிகாரத்தை நிறுவ முயற்சி செய்த அல்பெர்க் மற்றும் வாஸ்கோடகாமா செய்த பயணம் ஒரு வகை. அறிவு மற்றும் ஞானத்தை விரும்பி யுவன் சுவாங்,அல்பெருனி போன்றவர்கள் செய்த பயணம் மற்றொரு வகை. அது மட்டும் இல்லாமல் சாகசமாய் வடதுருவவத்திற்கு செல்வது, எவெர்ஸ்ட் க்கு செல்வது ஒரு வகை பயணம். நடந்து அல்லது லிப்ட் கேட்டு சென்ற லுடோவிக் ஹப்லர் போன்றவர்களும் பயணம் செய்த வகை உண்டு. அதிக தூர பயணங்கள் நான் சில முறை செய்ததுண்டு. இருசக்கர வாகன பயணமாக நான் சென்றதுண்டு. நெடுசாலை வழி பணி சார்ந்த நிமித்தமாக நான் செல்லும் போது சாலையில் இருசக்கர வாகனம் மூலம் நெடுந்தூரம் பயணம் செய்வார்கள் நிறைய பேரை பார்த்ததுண்டு. இன்றைய காலகட்டத்தில் அவ...