Posts

Showing posts from July, 2022

சிகப்பு விளக்கு

Image
                                         சிகப்பு விளக்கு நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள், கேள்விப்படாதவர்கள் என யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா  மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ? என 200 ஆண்டுகளாக வரலாறு இருக்கிறது.மும்பையை சுற்றி பார்க்க வந்த எங்களுக்கு,இந்த பகுதியையும் பார்த்து,ரசித்து விட்டு வந்துவிடலாம் என்று நண்பன் விக்கியின் நச்சரிப்பால் மாலை வேளையில் அங்கு செல்ல நினைத்தோம்."காமத்திபுரம் எப்படி போகனும்" என்று சிலரிடம் கேட்டால்,நம்மை ஏற இறங்க பார்க்கவோ!,தவறாக நினைக்கவோ! அங்கு யாரும் இல்லை.எந்தவித தயக்கமின்றி வழி சொல்லுவார்கள். காரணம் உள்ளூர்வாசியோ,வெளியூர்வாசியோ,...