அவள் பெயர்

யாரோ , யாரையோ பெயர் சொல்லி அழைக்கும் போது "அவ தான் நம்மள கூப்பிடுறா " என்று நினைத்து திரும்பி பார்த்த அனுபவம் அவனுக்கு இருக்கு. படிக்கிற புத்தகத்திலயோ, கடையிலேயோ,வேற எங்கேயோ காதலியோட பெயரை பார்த்தால் அவனுக்கு மனதில் ஒரு சின்ன சந்தோஷம். இப்படி ஒரு சுகமான ஒருதலைகாதல் அனுபவம் எல்லாருக்குமே இருக்கும். அப்போது அவன் ஒன்பதாம் வகுப்பு,புது ஸ்கூல்ல சேர்ந்தான். அப்ப தான் அவனோட காதல் பயணமும் தொடங்குச்சு. அப்போ அவள் அதே ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படித்தாள். முதன்முதலாக அவள் ஸ்கூலுக்கு போற ஆட்டோவுல தான் பார்த்தான். அன்னைக்கு ஆட்டோவுக்கு புதுவரவா அவள் சேர்ந்தாள். "ஏற்கனவே ஆட்டோவுல 12 பேரு.இதுல இன்னொரு ஆள் வேறயா ?" என்று கடுகடுப்பாவே இருந்தான். அந்த ஆட்டோவை பொருத்தவரைக்கும் அந்த ஸ்கூல் டிரிப்ல இவன் தான் பெரிய பையன். மத்தவங்க எல்லாம் குழந்தைகள்.அதாவது நாலாவது, அஞ்சாவது படிக்கிறவங்கதான். அந்த பொண்ணு ஆட்டோவில் வரும்போது எல்லாம் சிடுசிடுன்னு இருப்பான். அவளை பாத்தாலே இவனுக்கு பிடிக்காது. "ஆட்டோவுல உட்கார கூட முடியல, அதனால வேற ஆட்டோவுல போறேன்" என்று அவன் அம்மாகிட்ட ச...