அவள் பெயர்


யாரோ, யாரையோ பெயர் சொல்லி அழைக்கும் போது "அவ தான் நம்மள கூப்பிடுறா " என்று நினைத்து  திரும்பி பார்த்த அனுபவம் அவனுக்கு இருக்கு.
படிக்கிற புத்தகத்திலயோ, கடையிலேயோ,வேற எங்கேயோ காதலியோட பெயரை பார்த்தால் அவனுக்கு மனதில் ஒரு சின்ன சந்தோஷம். இப்படி ஒரு சுகமான ஒருதலைகாதல் அனுபவம் எல்லாருக்குமே இருக்கும்.


அப்போது அவன் ஒன்பதாம் வகுப்பு,புது ஸ்கூல்ல சேர்ந்தான். அப்ப தான் அவனோட காதல் பயணமும் தொடங்குச்சு. அப்போ  அவள் அதே ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படித்தாள்.

முதன்முதலாக அவள் ஸ்கூலுக்கு போற ஆட்டோவுல தான் பார்த்தான்.

அன்னைக்கு ஆட்டோவுக்கு புதுவரவா அவள் சேர்ந்தாள்.
"ஏற்கனவே ஆட்டோவுல 12 பேரு.இதுல இன்னொரு ஆள் வேறயா ?" என்று கடுகடுப்பாவே இருந்தான்.

அந்த ஆட்டோவை பொருத்தவரைக்கும் அந்த ஸ்கூல் டிரிப்ல இவன் தான் பெரிய பையன். மத்தவங்க எல்லாம் குழந்தைகள்.அதாவது நாலாவது, அஞ்சாவது படிக்கிறவங்கதான்.
அந்த பொண்ணு ஆட்டோவில் வரும்போது எல்லாம் சிடுசிடுன்னு  இருப்பான். அவளை பாத்தாலே இவனுக்கு பிடிக்காது.

"ஆட்டோவுல உட்கார கூட முடியல, அதனால வேற ஆட்டோவுல போறேன்" என்று அவன் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தான். அவன் அம்மாவும் "சரிப்பா வேற ஆட்டோ மாத்திவிடுறோம் அப்படின்னு" சொன்னாங்க.

அதுவும் புதிதாக வந்த அந்த பொண்ணு அவன் கூட ஆட்டோவில் ஸ்கூலுக்கு போகும் போதும்,வரும்போதும் பக்கத்தில் உட்கார்ந்தாலும், பேசினாலும் இவனுக்கு பிடிக்காமலே இருந்தது.முகத்தை காட்டி கூட பேசமாட்டேன். கோபப்பட்டு தலையை திருப்பிக்குவான்.
அப்படி ஒரு நாள் அந்த பொண்ணு இவன் பக்கத்துல உட்கார்ந்தாள்.இவனைப் பார்த்தும் சிரித்தாள். அப்போ உடனே கோபப்பட்டு "ப்பே"...என்று சொல்லிட்டு மூஞ்சியை திருப்பி கொண்டான். உடனே அந்த பொண்ணுக்கு முகமே வாடி போனது. ஸ்கூல் வந்ததும் இறங்க போகும் போது, இவன் அவள் முகத்தைப் பார்த்தான். "ஏன் என்னை வெறுக்கிறங்க ?,
நான் அப்படி உங்களை என்ன பண்ணேன்னு ?" அவனுக்கு கேட்ட மாதிரி இருந்தது அவளோட பிஞ்சு முகம்.
எதுவும் பேசாமல் கிளாசுக்கு போனான்.

"ஏன் இவ்வளவு வெறுப்பா நடந்துக்குறேன் ?,
அவளை ஏன் எனக்கு பிடிக்கல?,
அவ அப்படி எனக்கு என்ன பண்ணா?, " என்று அன்று முழுதும் அவன் யோசனை செய்து கொண்டே இருந்தான்.

சாயந்தரம் ஸ்கூல் முடிஞ்சதும் ஆட்டோவில் ஏற வந்தான். அப்போ அந்த பொண்ணும் வந்தாள்.
"அந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்டு, அவ கிட்ட பேசலாம் " என்று முடிவு பண்ணி ஆட்டோவில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். "அவகிட்ட பேசலாம்" என்று அவளையே பார்த்தான்.ஆனால் அவள் இவனை திரும்பி கூட பார்க்கவில்லை.
"என்னடா, இவ திரும்பி கூட பாக்க மாட்டேங்கற ?, 'கொழுப்பு' அதான்" என்று  நினைத்தபடி பேசாமல் இருந்தான்.

மறுநாள் "அவகிட்ட பேசலாம்" என்று நினைத்து அவள் பக்கத்திலே உட்கார்ந்தான். ஆனால் அவள் இவனை கண்டுக்கக் கூட இல்லை.
அன்னைக்கு சாயந்தரம் நல்ல மழை. ஸ்கூல் விட்டும், யாரும் கிளாஸை விட்டு வெளியில் வரவில்லை. வெளியே அவ்ளோ பெரிய கனமழை.
கொஞ்ச நேரத்துல மழையோடு வேகம் குறைந்தது. எல்லாம் கிளாஸ் விட்டு கிளம்பினாங்க. ஸ்கூலுக்கு வெளியே ஆட்டோ ரெடியாக நின்றது. எல்லா குழந்தைகளும் வந்து ஏறினார்கள். மழை மறுபடியும் வேகமாக ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது.

"எல்லாரும் வந்துட்டாங்க, இந்த கார்த்தி பயல மட்டும் காணோம்" என்று கோபப்பட்டார் ஆட்டோ டிரைவர்.

"மழை அதிகமாக வரும்" ஆட்டோ ரெண்டுபக்கமும் கருப்பு கவர் போட்டு மூடிவிட்டு, ஆட்டோவை கிளப்பினார் டிரைவர்.

"இன்னும் கொஞ்ச நேரம் இருங்க அண்ணே. கார்த்தி வந்துருவாரு" என்று அந்த பொண்ணு ஆட்டோ டிரைவரிடம் சொன்னாள்.

அதே மாதிரி வேகமாக ஓடிவந்து ஆட்டோவில் ஏறினான் கார்த்தி.
" ஏண்டா லேட்டு மழை இப்ப அதிகமாயிடுச்சு பாரு.சீக்கிரம் வந்திருந்தா நனையாமல் வீட்டுக்கு போய் இருக்கலாம்ல்ல" என்று திட்டி கொண்டே, இரண்டு பக்கமும் மழை தண்ணீர் உள்ளே வராதவாறு கவரில் மூடி வண்டியை எடுத்தார் ஆட்டோ டிரைவர்.

கார்த்தி எதுவும் பேசாமல்  உட்கார்ந்தான். அவன் பக்கத்துல அவள் உட்கார்ந்திருந்தாள். ஆனால் இவனுக்கு நினைப்பு வேற எங்கேயோ இருந்தது. அந்த பொண்ணு இவனைப் பார்த்து "ஏங்க லேட்டு" என்றாள்.
குரல் கேட்டு சட்டென்று கழுத்தை  திரும்பி அவளைப்பார்த்தான். என்ன பதில் சொல்வதென்று  தெரியவில்லை. "பிரண்ட்ஸ் கூட கிளாஸ்ல பேசிக்கிட்டே நின்னுட்டேன்" என்றான்.
"ம்..ன்னு" சிரித்து கொண்டே திரும்புனாள்.
அவள் பேசிய குரல் இவனுக்கு என்னவோ செய்தது. இருதய துடிப்பு அதிகமாக துடிப்பது போன்ற உணர்வு. ஆட்டோ பயணமோ, காற்றில் மிதப்பது போல இருந்தது.
ஆட்டோவில்  மற்றவர்கள் எல்லாம் பக்கத்தில் ஏதோ பேசி சிரித்தபடி வந்தார்கள். ஆனால்  இவனுக்கு மறுபடியும் "இவளிடம் மட்டும்  பேச வேண்டும்" என்று  தோனியது. அவளைத் திரும்பிப் பார்த்து "என் பேரு கார்த்தி,உன் பெயர் என்ன ?" என்றான். அவள் சிரித்து கொண்டே, "இத்தன நாளா வறீங்க, என் பேரு தெரியாதா? " என்றாள். இவனுக்கும் என்ன பதில் சொல்வதென்று  தெரியவில்லை.  அமைதியாக இருந்தான். அவள் மறுபடியும் சிரித்தபடி "என் பேரு சிவ சுந்தரி" என்றாள்.
இவனும் சிரித்தபடியே  பேச ஆரம்பித்தான். வெளியில் மழையும் நின்றது. ஒவ்வொருத்தரா ஸ்டாப் வரவும் எல்லாரும் இறங்கி சென்றார்கள்.ஆனால் நேரம் போறது கூட தெரியாமல் இரண்டு பேரும் பேசி கொண்டே வந்தார்கள்.  பேச்சுவாக்கில் அவள் அவனை பேர் சொல்லியே கூப்பிட ஆரம்பித்தாள். இவனும் கண்டுகொள்ளவில்லை.
"நீங்க பேச்சுப்போட்டியில் பேசறப்ப,நா கேட்டுருக்கேன்" என்றாள்.
உடனே இவனும் தன்னை பத்தி பெரிதாக பில்டப் கொடுத்தபடியே வந்தான். அவள் வீட்டுக்கு முன்னாடி ஆட்டோ நின்றது.
"சரி நான் போயிட்டு வரேன். நாளைக்கு பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு இறங்கிப் போனாள். ஆனால் இவனுக்கு மனசு இல்லை. "இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம்" என்று தோனியது.
"அடுத்தநாள் எப்படா வரும் அவகிட்ட என்ன பேசலாம்" என்று மனசுக்குள்ளே ஃப்ரிபேர் பண்ண ஆரம்பித்தான். தினமும் ஸ்கூலுக்கு போகும்போது, வரும்போது அவள் கூட மட்டும் அதிகம் பேசி கொண்டே போவான். கிளாஸ் இன்டர்வல் டைம்ல அவள் கிளாஸ் பக்கம் போய் சுத்துவான். அவனுக்கு "இது என்ன மாதிரி உணர்வு" என்று அர்த்தம் தெரியவில்லை. ஆனால் இது ஒரு புது சந்தோஷமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் எடுத்துகிட்டு அவள் வீட்டு பக்கம் போவான். அந்த நேரம் அவள் வெளியே வந்து நிற்கும் போது, சைக்கிளில் கைய விட்டு ஓட்டி சாகசம் செய்வான்.

அந்த அறியாத வயதிலேயே பல ஆரத்து வேலைகளை பண்ண ஆரம்பித்தான்.

பல நேரங்களில் ரொம்ப ஜாலியாக அவகிட்ட பேசி, அவளை கிண்டல் பண்ணுனான்.

அவளும் "ஏன் இப்படி பண்றீங்க" என்று  சிரித்து கொண்டே பேசுவாள்.

ஒருமுறை "வேற ஆட்டோவுல போறியா" என்று அம்மா கேட்ட போது,
"வேணாம்மா.எனக்கு இதுல  ஸ்கூலுக்கு போகதான் புடிச்சிருக்குன்னு" சந்தோஷமா பதில் சொன்னான்.
ஆட்டோவில் வரும்போது அவள்கூட பேசுறதும்,ஸ்கூல்ல கலர் டிரஸ் போட்டு வரப்ப,அவளும் இவனும் ஒரே கலர டிரஸ் போட்டுருந்தா ! அப்ப  அவளுக்கு சாக்லேட் வாங்கி குடுக்குறதுமா இருந்தான்.

ஒரு நாள் சாயந்தரம் வரும்போது அவள் கழுத்தில் ஸ்கூல் ஐடி கார்டு தொங்குறதைப் பார்த்தான். "வழக்கமா ஸ்கூல் முடிஞ்சதும் ஐடி கார்டை கழட்டி பேக்ல வச்சுடுவா, ஆனா இன்னைக்கு மறந்துட்டா போல" என்று  நினைத்து கொண்டான். வழக்கம் போல ஆட்டோவில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே வந்தான். அப்போது அவளுக்கே தெரியாமல் அவள் கழுத்தில் இருந்த ஐடி கார்டை  உருவி அதை வேகமாக தன் பாக்கெட்டில் மறைத்து கொண்டான். வெறும் ரோப் மட்டும் தான் அவ கழுத்தில் தொங்கியது. அவள் வீடு வரவும் இறங்கி போனாள்.

கடைசி ஸ்டாப் இவன் வீடும் வந்தது. வீட்டுக்கு போயி பேக்கை வைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் அவளின் ஐடி கார்டை எடுத்து பார்த்தான்.அந்த ஐடி போட்டோவை பார்த்தவுடனே அவனுக்கு சிரிப்பா வந்தது. மனசுக்குள்ள இனம்புரியாத ஏதோ சந்தோஷம். அவள் போட்டோவில் அவ்ளோ அழகா இருந்தாள்.அவளின் பிறந்தநாள் எப்போது,அவள் வீட்டு டெலிபோன் நம்பர் எல்லாத்தையும் பார்த்து குறித்து கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவனுக்கு ஒரு ஆச்சரியம். அது என்னான்னா! அவளின் உண்மையான பெயர் வேறு. ஒரே அதிர்ச்சியாக இருந்தது. " அப்போ உண்மையான பேரு வேற, அப்புறம் ஏன் நம்மகிட்ட பேர மாத்தி சொன்னா ? " என்று அவனுக்கு தோன்றியது. அப்புறம் தான் அவனுக்கு புரிந்தது, "அவ உண்மையான பெயரைச் சொன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கன்னு, பேரை மாத்தி எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்திருக்கா "  என்று நினைத்தான்.

"ஆனா அது சாமி பேரு அதை சொல்லி கிண்டல் பண்ணி சிரிக்க கூடாது"  என்று நினைத்து கொண்டு, "அவ கிட்ட இதபத்தி கேட்க வேண்டாம்ன்னு"  முடிவு செய்தான்.

ஆனால் அந்த பொயரை பார்த்தால் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. அடுத்த நாளிலிருந்து அவள் ஸ்கூலுக்கு ஆட்டோவில் வரவே இல்லை. 'ஏன்' என்று  அவனுக்கு தெரிய வில்லை. ஆட்டோ டிரைவரிடம் கேட்டான். "எனக்கு தெரியலடா தம்பி. நாளையிலிருந்து வர மாட்டா அப்படின்னு அவ அப்பா  எனக்கு  சொன்னாரு" என்றார் ஆட்டோ டிரைவர்.

அவள் வீட்டு பக்கத்தில் இருக்க சின்னப் பையன் கிட்ட போய் "அவ ஏன் வரல" என்று கேட்டான்.

" இல்லன்னா அந்த அக்கா ஐடி கார்டு தொலைஞ்சு போச்சு. அதுக்காக அழுதாங்க. அவங்க அப்பாவும் அடிச்சுட்டாங்க. அப்பறம் அந்த அக்காவுக்கு காய்ச்சல் வந்திருச்சு. அதான் வரல" என்றான்.

இதைக் கேட்டவுடனே, "ஐயையோ நம்மளால அவ அடிவாங்கி இருக்காளேன்னு" அவனுக்கு மனசுக்குள்ள சோகமாச்சு.
அப்புறம் ஸ்கூல்ல இறுதி தேர்வு தொடங்கியது. அந்த நேரத்துல அவளைப் பார்த்தான். ஆனால் போய் பேசாமல் இருந்தான்.அவளும் இவனை பார்த்தால், அவளும் வந்து பேசாமலே போனாள். எக்ஸாம் முடிந்து மே மாசம் லீவு விட்டாங்க. சைக்கிள் எடுத்துக்கிட்டு அவள் வீட்டு பக்கம் போய் சுத்துவான். ஆனால் அவளை பாக்கவே முடியவில்லை.மறுபடியும் ஜூன் மாதம் ஸ்கூல் திறந்தது. ஆனால் அப்ப அந்த ஸ்கூல்ல அவளைப் பார்க்கவே இல்லை. அவங்க வீட்லையும் யாரும் இல்லை. "வேற எங்கேயோ குடி போயிட்டாங்கன்னு" பக்கத்து வீட்டு பையன் மூலம் தெரிந்து கொண்டான்.
இனம்புரியாத கவலை, அவள் கிட்ட பேச முடியாமல், அவளைப் பார்க்காமல் இருக்க முடியலையேன்னு வருத்தம். எப்போதும் எதையோ பறிகொடுத்த சோகமாகவே இருந்தான்.
இந்த சோகத்துக்கு காரணம் என்னன்னு கூட அவனுக்கு அப்போ தெரியவில்லை.

ரொம்ப வருஷம் கழித்து. இப்போ அவளோட ஐடி கார்டை எடுத்து பார்த்தான்.கண் கலங்கியது.ஆனாலும் இப்பவும் அவ பேரை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. "ஆனா அது சாமி பேரு சிரிக்க கூடாது"...



கார்த்திக் கிருபாகரன்


Comments

  1. Ena Sago last la Ipdi aaidichi ☹️, ipa varaikum avanga la paaka mudiyala nra pa konja varuthama tha irruku, chumma tha ulla Vanthen but nalla feel, itha padikirapa,aana unga alavuku thairiyam la ila paa �� , ena Kadaisi varaikum Heroine per ha sollama �� unga Story ya mudichitinga, nalla irunthuchi ���� . அவள் பெயர்....?

    ReplyDelete
  2. Ena Sago last la Ipdi aaidichi ☹️, ipa varaikum avanga la paaka mudiyala nra pa konja varuthama tha irruku, chumma tha ulla Vanthen but nalla feel, itha padikirapa,aana unga alavuku thairiyam la ila paa 😅 , ena Kadaisi varaikum Heroine per ha sollama 😂 unga Story ya mudichitinga, nalla irunthuchi 😍😍 . அவள் பெயர்....?

    ReplyDelete
    Replies
    1. சாமி பேரு சொல்லகூடாது....மிக்க நன்றி தோழரே

      Delete
  3. Ena Sago last la Ipdi aaidichi ☹️, ipa varaikum avanga la paaka mudiyala nra pa konja varuthama tha irruku, chumma tha ulla Vanthen but nalla feel, itha padikirapa,aana unga alavuku thairiyam la ila paa 😅 , ena Kadaisi varaikum Heroine per ha sollama 😂 unga Story ya mudichitinga, nalla irunthuchi 😍😍 . அவள் பெயர்....?

    ReplyDelete
  4. Supereeee bt kataisi vara name ah solalaye 😔😔😔

    ReplyDelete
  5. நன்றி.... அது சாமி பேருங்க...சொல்லகூடாது

    ReplyDelete
  6. Really bro one side love romba feel ah irukum bro

    ReplyDelete
  7. Super story but enna name nu
    Sollave illaiye...

    ReplyDelete
  8. சூப்பர் 💗 சகோ....

    ReplyDelete
  9. தங்களின் சொந்தக் கதையோ 😅 நன்றாகவே இருந்தது!

    ReplyDelete
  10. கடைசி வரைக்கும் பேரே சொல்லலயே... வேண்டாம்
    சாமி பேரு..😅
    அருமையான கதை....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாவு ரகசியம்

சிகப்பு விளக்கு

வெண்ணிற இரவுகள்