கொங்கை

மார்பக கதைகள் பலவற்றை படித்திருப்போம். சிலப்பதிகாரக் கண்ணகி தன் ஒரு பக்க மார்பை கிள்ளி எறிந்து மதுரையை எரித்தாள். புறநானூற்றுத் தாய், போரில் தன் மகன் முதுகில் குத்துபட்டு இறந்திருந்தால், அவனுக்கு பால் கொடுத்த தனது மார்பகத்தை அறுத்து எரிவதாய் கூறுவாள். கருப்பினப் பெண் ஏலம் போன தன் மகன் பால் குடிக்க, தன் மார்பை அறுத்து கொடுத்து அனுப்புவாள். முலை வரி வசூலித்த திருவிதாங்கூர் மன்னனுக்கு, வரி கட்ட முடியாமல்,தன் முலையை அறுத்துக் கொடுத்த பெண். ஒரு ஈழப் பெண்களின் மார்புகளில் சிங்களவர்கள் அறுத்தது. சேரி பெண்கள் ஜாக்கெட் அணிந்தார்கள் என்பதற்காக சேரி பெண்களின் மார்புகளை அறுத்தது. இன்னும் எத்தனை எத்தனையோ. இது முலைகளைப் பற்றிய கதை என்பதால் பெண்களின் கதை என சொல்லிவிடமுடியாது. நம் தாய்மார்களின், சகோதரிகளின், கதை இது. முலை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே ஒருவருக்கு பரிதாபமோ,வலியோ ஏற்படுகிறதோ! அவர்கள் நிச்சயமாக இந்த நாவலை வாசித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும். ஆசிரியர் அண்டனூர் சுரா அவர்களின் முதல் நாவலை படிக்கிறேன். கதையின் கரு பெண்களை மையப்படுத்தியது ஆனால் எழுதியவர் ஆண். பெண...