ஆத்தங்கரை ஓரம்

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சிந்தூர். நதிக் கரையோரம் அமைந்திருக்கும் பல கிராமத்திற்கு அணைக்கட்டு வடிவில் ஆபத்து வருகிறது. பிறந்து, வளர்ந்த தாய் மண்ணைப் பிரியமனமில்லாமல், கோவிந்த் பாயி அவரது மகன் சிமன் தலைமையில் அந்த கிராம பழங்குடி மக்கள் அனைவரும் அரசை எதிர்த்து, எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.3,20,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த படுகிறது. அதுவும் அணைகட்டானது சித்தூருக்கு பத்து கிலோமீட்டருக்கு முன்னால் லக்ஷ்மன் நகரப் பகுதிகள் தான் அணைகள் கட்டுவதற்கு முற்றிலும் ஏற்றதாக இருக்கும். ஆனால் அந்த குடியிருப்பு பகுதிகள் மாநிலத்தின் முக்கிய வர்த்தகர்கள், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் அவருடைய அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைய இருக்கும் பகுதிகள். அதனால் 10 கிலோ மீட்டருக்கு தள்ளி பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த அணை வருகின்றது. சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள் சீரழிந்து போகும் என்பதால், சமுக ஆர்வலர்கள் ராதா, சந்தீப், நிதின், அரசு அதிகாரி சுதிர் அவரது மனைவி யூதிகா ஆகியோர் அணைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர். அரசை எதிர்த்துப் போராடி, அப்பாவி மக்கள...