கடல் புறா – இரண்டாம் பாகம்

கடல் புறா – இரண்டாம் பாகம் பரபரப்பாக முடிந்த கடல்புறா பாகம் ஒன்று வாசித்து முடித்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் இரண்டாம் பாகத்தை வாசிக்க எடுத்தேன். இடையில் நிறைய புத்தகங்கள் வாசித்தாலும், கடல்புறா பாகம் 1 கதையின் தாக்கம் மனதில் இருந்து கொண்டுதான் இருந்தது. ஆசிரியர் சாண்டில்யனை பற்றி நிறையவே எடுத்துக் கூறலாம். அவரின் எழுத்து நடை, நாவலில் அமைத்த காட்சிகளின் விதம், குறைவான கதாபாத்திரங்களை கொண்டு அவர் கதையை புரியும்படியும் தெளிவாகவும் காட்சி அமைப்பில் ஏற்படும் சிறு அசைவுகளையும் நயத்துடன் எடுத்துரைப்பார். தமிழ் எழுத்தாளர்களின் மிகச்சிறந்தகளில் ஒருவர்.கடல் புறா இரண்டாம் பாகத்தின் கதையை சற்று அலசினால், கடல்புறா என்னும் போர் கப்பல் உருவாக்கப்படுவதும், கொள்ளையர்களை போர் வீரர்களாக்கி அக்ஷய முனையை தன் வசப்படுத்துவதுதான் இரண்டாம் பாகம்.ஆனால் போர் காட்சிகளோ,சாகச காட்சிகளோ இல்லை.பெரும் திருப்பங்களோடு பயணிக்கும். பாலூர் பெருந்துறையில் இருந்து தப்பிய இளைய பல்லவன், சீன கடற்கொள்ளையன் அகூதாவிடம் ஒரு வருட காலம் பயிற்சி மேற்கொள்கிறார். அவருடன் அமீர், கண்டியத் தேவன...