ஆலமரம்

ஆத்தோரம் ஆலமரம் பல ஆண்டா வளர்ந்த மரம்! ஓங்கி வளர்ந்து தழைத்து தொங்கும் விழுதுகள் நிறைந்த மரம்! நீடித்த வெயில் அடிக்கயில் நிழல் தந்து காத்த மரம்! பல புயல் வந்த போதும் களங்காம நின்ற மரம்! பதினெட்டு பட்டி பஞ்சாயத்துக்கள் நடந்த மரம்! பலரோட நினைவுகளை சுமந்து நிற்கிற மரம்! இப்படி சொல்லிகிட்டே போனாலும்,மூன்று நாட்களா பெய்யுற மழை.மிகப் பெரிய சூறாவளி கரை கடந்து போயிருக்கு.அதனால் 'எப்புடியும் ஆலமரம் சாஞ்சிருக்கும்னு' ஊருக்குள்ள பேசிக்கிறதை கேட்குறப்ப வேம்பனுக்கு மனசு கவலையாவே இருந்தது. சூறாவளி வந்து பல வீடு,கூரை,நிலம்,தோப்பு எல்லாம் சேதரமாகிருக்கு.ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு 'ஆலமரத்துக்கு என்னாச்சுகிற' மனநிலை தான் இருந்தது. இந்த ஆலமரத்தை வேரோட எடுக்க பல வருஷமா,பல பேர் முயற்சி பண்ணிட்டுதான் இருக்காங்க.அதில் ஐந்து வருஷத்துக்கு முன் ஆளும் கட்சி நான்கு வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தாங்க.ஊர் சுடலமுத்து எதிர்கட்சி எம்எல்ஏ வா இருந்தார். ஊர் மக்களோட சேர்ந்து கடுமையா போராடி ஆலமரத்தை வெட்ட விடாம ப...