சாவு ரகசியம்
நள்ளிரவு தாண்டிய நேரம்.அடியாநத்தம் அரசு மருத்துவமனை..அமைதியான மருத்துவமனையில் அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் குரல் மட்டும் எங்கும் எதிரொலித்தது."என்னவிட்டு போய்டீங்களே!,உங்கள இப்புடி பண்ணது யாருங்க ?" என்று கதறி அழ,அருகிலிருந்த போலீஸ்காரர்களுக்கும் "இந்த கொலை எப்படி நடந்தது ?"என்ற குழப்பத்தில் நின்றனர். நள்ளிரவில் அந்த கதறல் சத்தமே!,அங்கு கூட்டம் கூடியது. "சொத்துக்காக பங்காளி சண்டை நடந்திருக்குமோ?,இல்லை இவர் முன்னாள் எம்எல்ஏ.அரசியலில் இருக்கிற ஆள்.அதனால் எதிரி எவனோ கொன்னுருப்பானோ!" என்று போலீஸ் விசாரித்து கொண்டிருக்க,அந்த நேரத்தில் கூட்டத்திலிருந்து ஒருவன் வந்து நின்றான்.நடுத்தர உயரம்,கருத்த நிறம் காக்கி சட்டை,பேன்ட் அணிந்திருந்தான்.அப்பாவியான குணமும்,மணமும்.அவன் அந்த அரசு மருத்துவமனை பிணவறை இரவு நேர சிப்பந்தி. கதறி அழும் பெண்ணை பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருந்தான். "யோவ்,என்னைய்யா, நின்னு வேடிக்க பார்த்துட்டு இருக்க,டெட்பாடிய உள்ள எடுத்துட்டு போ" என்று அவனை பார்த்து கடுப்பாகி இன்ஸ்பெக்டர் அதட்டினார். அதட்டல் சத்ததிற்கு சட்டென்று நிசப்தமானது,அங...