சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்

சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன் சினிமா மோகத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிப்போவதை கதைமூலமாக ஜேகே அவர்கள் தெளிவு படுத்துகிறார்.1975 க்கு முந்தைய காலகட்டங்களிலே கதைக்களம் அமைகிறது. அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை என்று இரண்டில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்தவர் வாத்தியார் (எம்ஜிஆர்).அவரது மிக தீவிர ரசிகராக இருக்கிறார் ரிக்ஷா வண்டி ஓட்டும் செல்லமுத்து மற்றும் அவனது மனைவி சித்தாள் கம்சலை.புருஷன விட பொண்டாட்டி கம்சலை வாத்தியாருக்கு மிக தீவிர ரசிகை.வாத்தியார் படம் புதிதாக ரிலீஸ் ஆனால் தியேட்டரில் புருஷனுக்கு முன்னால் இவள் சென்று பார்ப்பாள். படம் பார்த்து அப்புடியே மயங்கிடுவாள்.படம் பார்க்கும் போது தியேட்டரில் பக்கத்தில் எவனாவது இவளினம் சில்மிஷம் பண்ணால்கூட இவளுக்கே தெரியாது.அவளோ மதிமயங்கி வாத்தியார் படத்தை ரசிப்பாள்.சரி படம் பாக்கும் போது ரசித்தால் பரவயில்லை.டீ கடையில் வாத்தியார் பட பாட்டு ஓடினால் கேட்டு ரசித்து கொண்டே நிற்கிறதும், சுவற்றில் வாத்தியார் போஸ்டர பாத்தால் முத்தம் கொடுக்கிறதும்,வாத்தியாரை நினைச்சுகிட்டே புருஷனோட வாழ்றதும்,வாத்தியார் முகம் போட்ட பனியன...