நகல்
.jpeg)
நகல் மாலை நேரம் ஆகிவிட்டது. மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலனுக்கு இருட்டுவதற்குள் பாதுகாப்பாக தன் வீட்டை சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருந்தார்கள். கபிலனின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ, பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. காரணம் அவன் இந்த பகுதியிலே வாழ்ந்து பழகியவன். ஹரிக்கு சற்று சிரம்மாகவே இருந்தது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும், மனதை மயக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும், நறுமணமும்,குளிர்ந்த காற்றும் அவ்வப்போது ஹரியை தாமதபடுத்தி கொண்டிருந்தன. திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது. உயரமான மரங்கள். மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி காணாததை கண்டவன் போல மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலனுடன்...