பெத்தவன்
பெத்தவன் - இமையம் பெண்ணைப் பெத்தவனின் பார்வையில் கதை நகர்கிறது. தவமிருந்து இருபது வருடங்களுக்குப் பிறகு பழனிக்கு பாக்கியம் பிறக்கிறாள். பாக்கியத்திற்கு பிறகு செல்வராணி. பாக்கியம் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் பொழுது கீழ் சாதியைச் சேர்ந்த பெரியசாமியை காதலிக்கிறாள். இதை ஊரார் மூலம் அறிந்து கொள்கிறான் பழனி. பாக்கியத்தையும் கண்டிக்கிறார். தேர்வுக்கு மட்டுமே அனுமதிக்கிறார்கள். சில நாட்களிலேயே திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது முதல் முறையாகத் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள் பாக்கியம். இரண்டாவது முறை பாக்கியத்தை பற்றி பழனி வேறு ஒருவர் மூலமாக கேள்விப்படும் பொழுது மீண்டும் கண்டிப்பு, மீண்டும் ஒரு திருமண ஏற்பாடு இரண்டாவது முறையும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். இவர்களின் காதலுக்கு அந்த ஊரில் இருக்கும் ஒரே உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பழனியிடம் அவர்கள் அவன் மகளை கொன்று விடச் சொல்கிறார்கள். ஒருமுறை பிரச்சினை அதிகமாகி பாக்கியத்தின் வாயில் ஊரார்கள் சாணியை கரைத்து ஊற்றி தகாத வார்த்தைகளால் பேசி தலை முடியையும் அறுத்து விடுகிறார்கள். இவ்வளவு கொடும