கருக்கு

பாவப்பட்ட மக்கள் மோட்சத்திற்கு செல்ல வழி காட்டுபவர்களுடன் ஒரு தலித் மகள் வாழ்ந்த கதை. சொந்த மண்ணில்தான் தலித்துகளுக்கு அவமானம் என்று நினைத்து விட வேண்டாம். ஆண்டவனின் பிரதிநிதிகளிடம் அதே கதிதான். இதில் இந்த மதம், அந்த மதம் என்ற வேறுபாடுகள் இல்லை. இதுதான் என்றும் இருக்கிற கொடுமை. இந்த கொடுமையை எதிர்த்த போராட்டமே இந்த  கருக்கு. அதில் இந்த கருத்தை துணிச்சலாக  உருவெடுத்து பயணித்திருக்கிறது கருக்கு. ஜாதியின் பிடியில் சிக்கி சீரழிந்து சிதைக்கப்பட்ட அவர்களுக்கும், விளிம்பு நிலைக்கு விரட்டப்பட்டவர்களுக்கும் தங்களது வாழ்க்கை பாதையில் மறுபதிப்பு செய்யவும்,சிக்கலை உடைத்தெறிந்து விட்டு தன்மானத்துடன் தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழவும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது இந்த நாவல். ஓரங்கட்டப்பட்ட பல விஷயங்களை சொல்லியிருப்பது இந்த நூலில் அருமை. 


நாலு பேருக்கு பிரயோக படுற மாதிரி வாழனும். போலித்தனமாக சிரித்துவிட்டு வாழ்வதைவிட,நெசத்துக்கு அழுதுகிட்டு வாழ்வது பரவாயில்லையேன்னு எதர்த்தமா வாழ்வது மேல். இது ஒரு அனுபவக்கதை.

ஆனால் இந்த நாவலில் இடம் பெற்ற சாதிய கொடுமைகளின் சுமையைப் பார்க்கும் போது நாவலின் கணம் கூடித்தான் போகிறது. 

தனது பள்ளி வாழ்க்கையின் அனுபவித்த கொடுமையை இதில் விளக்குகிறார் அதில் ஒரு சிறு சம்பவம்...

பள்ளி செல்லும் காலத்தில், பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னர் பள்ளியிலேயே மாணவ மாணவிகள் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் விளையாட்டு மதில் சுவர் பக்கம் சாய்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தின் மீது திரும்புகிறது. அதன் மீது ஏறி விளையாடத் தொடங்குகின்றனர். விளையாட்டின் சுவராஸ்யத்தில் அனைவரும் அந்த சிறிய தென்னை மரத்தில் பிஞ்சு விட்டிருந்த தேங்காய் மீது கைவைக்க.. அது பாமா கைவைக்கும் போது மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. அனைவரும் பயந்து ஓடிவிட, பாமாவும் ஓடி விடுகிறாள். அடுத்த நாள் காலை ப்ரேயர் ஹாலில் தலைமையாசிரியர் “உன் சாதிப் புத்திய காட்டிட்டியே.. ஏண்டி இளநீய புடுங்குனே.. ஸ்கூலுக்குள்ள வராத.. வெளிய போ…” என விரட்டுகிறார். பாமா தான் அறிந்து ஏதும் தவறு செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக அவர் உதிர்க்கும் கண்ணீர் மட்டுமே அங்கு நிற்கிறது. இது அவர் வாழ்க்கையில் நேரிடையாக ஏற்பட்ட முதல் அவமானம். அதுவும் நன்கு படித்து பட்டம் பெற்ற ஒரு தலைமையாசிரியரின் வாயில் இருந்த வந்த அந்த வார்த்தைகளை அவரால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை. அதன் முழு வெளிப்பாடுதான் இந்த நாவல்.


பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் பிறக்குமானால்,சாதியற்ற சமூகம் உருவாகும்...



கார்த்திக் கிருபாகரன்

Comments

  1. வாசிக்கத் தூண்டுகிறது அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. படித்தவர்கள் அந்த மாதிரியான வார்த்தைகளை பேச மாட்டாங்கனு யார் சொன்னா...அப்படி பார்த்தா
    நீ கீழ்சாதி பள்ளி கழிவறையைக் கழுவுனு
    சொல்லமாட்டாங்களே....
    படிக்க தூண்டுகிறது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்