கோடுகள் இல்லாத வரைபடம்

பயணத்தின் வழி உலகை பார்ப்பது தனி சுகம் தான்.




புத்தகத்தில் மார்கோ போலோ, வாஸ்கோடகாமா,யுவாங் சுவாங்,அல்பெருனி,லுடோவிக் ஹப்லர்,சதீஸ்குமார்,என நீண்டு கொண்டு ஒரு பயணம் போலவே செல்கிறது. பயணம் என்பது நோக்கம் சார்ந்து ஒன்று.   நோக்கம் இல்லாமல் ஒரு பறவையை போல அல்லது ஒரு துறவி போல ஒன்று என கூறலாம்.ஆனால் உண்மையில் பயணம்  இரண்டும் கலந்த விஷயம் தான். பயணம் மூலம் நாடுபிடித்து அங்கு தன்னுடைய அதிகாரத்தை நிறுவ முயற்சி செய்த அல்பெர்க் மற்றும் வாஸ்கோடகாமா செய்த பயணம் ஒரு வகை. அறிவு மற்றும் ஞானத்தை விரும்பி யுவன் சுவாங்,அல்பெருனி போன்றவர்கள் செய்த பயணம் மற்றொரு வகை. அது மட்டும் இல்லாமல் சாகசமாய் வடதுருவவத்திற்கு செல்வது, எவெர்ஸ்ட் க்கு செல்வது ஒரு வகை பயணம். நடந்து அல்லது லிப்ட் கேட்டு சென்ற லுடோவிக் ஹப்லர் போன்றவர்களும் பயணம் செய்த வகை உண்டு.

அதிக தூர பயணங்கள் நான் சில முறை செய்ததுண்டு. இருசக்கர வாகன பயணமாக நான் சென்றதுண்டு. நெடுசாலை வழி பணி சார்ந்த நிமித்தமாக நான் செல்லும் போது சாலையில் இருசக்கர வாகனம் மூலம் நெடுந்தூரம் பயணம் செய்வார்கள் நிறைய பேரை பார்த்ததுண்டு. இன்றைய காலகட்டத்தில் அவர்களை பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது ஒன்றுதான் 'பெட்ரோல் விக்கிற வெலைக்கு நீங்க எல்லாம் எப்படி புல்லட்,ஆர்ஒன்பை இந்த வண்டிக்கு பெட்ரோல் போட்டு பயணம் போறாங்களோ அப்படின்னு' மனதில் நினைத்தது உண்டு. எஸ்.ரா அவர்களின் துணையெழுத்து என்ற புத்தகம் படித்ததன் மூலம் பயணம் செய்யும் ஆசை அதிகரித்துக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் இருநூறு மைல்களுக்கு அப்பால் செல்ல வேண்டுமென்றால் மட்டும் பேருந்தில் பயணம் செல்கிறேன். என் சில தூர பயணங்கள் இருசக்கர வாகனத்தில் தான் இயற்கையை ரசித்துக் கொண்டு செல்லும் பயணம் மனதை லேசாக்கி வைத்தது. இரு சக்கர வாகனத்தில் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் இருக்கிறது.பலர் பயணங்கள் மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை பார்க்கும் போது எனக்கும் பயணங்கள் மேற்கொள்ள ஆர்வம் தூண்டும்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டதில்லை.காரணம் பயணங்களில் ஏற்படும் விபரீதங்கள்,சந்திக்கும் எதிர்மறை மனிதர்களை பற்றிய பயம்,சீதோஷ்ண நிலை, பொருளாதார சூழல் என பயணத்தை தொடர முட்டுகட்டையாகவே உள்ளது.
ஆனால் பயணம் மேற்கொண்டவர்கள் பலர் இவற்றை அறியாமல் பயணம் செய்திருக்கின்றனர். பண்டைய காலத்தில் சிலர் செய்த பயணம் தான் வரலாற்றிலும் இடம் பெற்றிருக்கின்றன. யுவான்சுவாங், சதீஷ்குமார் என பலர் இன்னும் நிறைய உள்ளன. வரலாற்றுப் பக்கங்களில் முகமது கஜினியின் படையெடுப்பு பற்றி விளக்கி இருக்கிறார்கள். அவர் இந்தியாவில் படையெடுத்து கொள்ளையடித்ததை பற்றி விளக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர் படையெடுப்பை 17 முறை தடுத்த மன்னர்களைப் பற்றிய வரலாறு எதுவும் இல்லை. இருட்டடிப்பு சம்பவம் போல தான் பலரின் பயண வரலாற்று நிகழ்வுகளும் மறைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.எவரெஸ்ட் என்பதை நேப்பாளிகள் சாகர்மாதா எனவும்,திபெத்தியர்கள் சோமுலிங்மா எனவும்,இந்தியர்கள் கைலாயம் எனவும் அழைத்தனர்.ஆனால் நேபாளிகள்,திபெத்தியர்கள் அவர்கள் கொண்ட பெயரை மாற்றவில்லை.மறக்கவில்லை. இந்தியாவில் மட்டும் எவரெஸ்ட் என வழக்கத்தில் மாறியது.

இந்தப் புத்தகத்தில் பல்வேறு பயணங்களை நான் பார்த்தேன். ஒவ்வொரு பயணத்திலும் நானும் பங்குபெற்று செல்வது போல எழுத்துக்கள் வழியாக காட்சிபடுத்துகிறார்.எஸ்.ரா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இறுதியாக வீட்டின் சமையலறையில் பயன்படுத்தும் காய்கறிகள்,பழங்கள்,சமையல் பொருட்களுக்களில்,நம் உடையில்,மொழியில், பழக்கவழக்கங்களில்
கூட ஒரு வரலாறு உண்டு.உதாரணமாக பழங்காலத்தில் தக்காளி,உருளைகிழங்கு வகைகள் பயன்படுத்தியதில்லை.அவை நம் நாட்டிற்கு வந்த வரலாறு உண்டு.அதுபோல ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு.அதை மீட்டு எடுத்து அறிந்து கொள்ளவும் விருப்பமும்,ஆர்வமும்,உழைப்பும் தேவையாக உள்ளது.

கார்த்திக் கிருபாகரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

சாவு ரகசியம்

சிகப்பு விளக்கு

வெண்ணிற இரவுகள்