Posts

Showing posts from November, 2022

ஒற்றை சிறகு ஓவியா

Image
                    ஒற்றை சிறகு ஓவியா - விஷ்ணுபுரம் சரவணன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவிற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்போது தான் அணிந்திருக்கும்  வேஷத்தில் இருந்து ஒவ்வொரு பொருளையும் எடுத்து தன் தோழி ஓவியாவிற்கு அணிந்து விடுகிறார்கள். சிறிது நேரத்தில் ஒற்றைச் சிறகுடன் ஓவியா உருவாகிறாள். அற்புதம் நிகழ்கிறது. அந்த அற்புதத்தின் மூலம் பல நிகழ்வுகளை செய்கிறாள். ஓவியாவின்  இந்த அற்புதத்தையே விழாவில் கலை நிகழ்ச்சியாக நடத்தலாம் என நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா உதவுகிறார். இவர்களின் அற்புதத்தை பார்த்து அதன் ஒரு பொருளைத் திருடி மறைத்து வைக்கிறான் ஒருவன். அந்த அற்புத பொருளை தேடும் பயணத்தில் பெற்ற அனுபவங்கள். கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதா ?, அதில் அந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டதா ? என்பதை மெல்ல மெல்ல ஒற்றைச் சிறகு ஓவியாவோடு நம்மை பறக்க செய்திருக்கிறார். அற்புதங்களைக் கண்டு பிடிக்க ஒவ்வொருவரின் கனவுக்குள் சென்று அதன் ரகசியங்களை தேடுவது, குழந்தைகள் சந்திக்கும் சிறுசிறு பிரச்சனைகள், அவர்கள் எதிர்கொள்வதும

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

Image
ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்"  நாவலை படிக்க ஆரம்பிக்கும் போது ஏதோ ! ஒரு புதிய சிந்தனை கிடைக்க போகிறது என்று ஜேகே அவர்களின் எழுத்துக்கள் மேல் இருந்த அபார நம்பிக்கையில் படிக்க ஆரம்பித்தேன்.நாவல் பாதி வரைக்கும் படித்தது அப்பறம் நாவலில் வர ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும்,நண்பர்கள்,உறவினர்கள்ன்னு ஒவ்வொருவரையா நினைத்தபடி வாசிக்க,வாசிக்க சினிமா காட்சி மாதிரி மனதில் நினைக்க ஆரம்பித்தேன்.அதில் வர கதை நாயகன் ஹென்றி.அது நான் தான் என்று கற்பனை செய்து நாவல தொடர்ந்து படித்தேன்.கதைப்படி  பல மன வேதனையால் பாதிக்கபடும் கிருஷ்ணராஜபுரத்தில் முக்கியமானவர் சபாபதி. பல மனகசப்பால் பிறந்து வளர்ந்த தன் ஊரை விட்டு யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு சென்று விடுகிறார்.வாழ்க்கை பாதை அவரை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.அதில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை. வளர்ப்பு மகனாக ஹென்றி கிடைக்கிறான்.தினமும் குடி, மகனோடு விளையாட்டுன்னு வாழ்கிறார் சபாபதி. தன் கிராமம் பற்றியும்,தன் பழைய வாழ்க்கை பற்றியும் ஹென்றியிடம் நிறைய சொல்லுவார் சபாபதி. இறப்பதற்கு முன் தன் சொத்துக்களை ஹென்றி பெயரில் மாத்தி எழுதி

சில நேரங்களில் சில மனிதர்கள்

Image
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்       3 ஆண்டுகளாக இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.பல புத்தக கடைகளில் கிடைக்கவில்லை,googleல் பலரின் இந்த புத்தகம் பற்றிய கருத்துகளை பார்த்த போது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.ஒரு வழியாக சென்னையில் புத்தகத்தை வாங்கி படித்தேன்.3 ஆண்டு ஆர்வம் புத்தகம் படிக்கும் போதே கதையோடு ஓன்ற வைத்தது,1970 ல் எழுதிய அக்னி பிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்கள் என பெயர் மாற்றமாக வெளியாகி உள்ளது. பதினாறு வயதுடைய பர்பன பெண்ணான கங்கா ஒரு மாலை பொழுதில் கல்லூரி முடிந்து வரும் வழியில்  யாரென்று தெரியாத ஒரு நபரால் தனது சுய நினைவை இழந்து தனது கற்பை பறி கொடுகிறாள்.உடை கிழிந்த கோலத்தில் தன்னையே இழந்து வீட்டிற்கு வந்து தாய் கனகத்திடம் குழந்தை போல விஷயத்தை கூறி அழுகிறாள்.தலையில் இடி விழுந்தது போல் மனகுமுறால் கதற,ஊரரால் தூற்றபட்டு அண்ணன் கணேசன் அம்மா,கங்கா வை துரத்தி விடுகிறான்.மாமா வெங்குடு ஆதரவில் வளர்கிறார்.குற்ற உணர்வு, வேறு வாழ்க்கையை தேடி கொள்ளாமல் தன் தாயுடன் தனிமையில் வாழ பழகுகிறாள்.12 ஆண்டு கடந்து செல்கிறது.ஆதரவு தருபவர் சும்மாவ தருவார். வெங்