ஒற்றை சிறகு ஓவியா

                    ஒற்றை சிறகு ஓவியா - விஷ்ணுபுரம் சரவணன்




அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவிற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்போது தான் அணிந்திருக்கும்  வேஷத்தில் இருந்து ஒவ்வொரு பொருளையும் எடுத்து தன் தோழி ஓவியாவிற்கு அணிந்து விடுகிறார்கள். சிறிது நேரத்தில் ஒற்றைச் சிறகுடன் ஓவியா உருவாகிறாள். அற்புதம் நிகழ்கிறது. அந்த அற்புதத்தின் மூலம் பல நிகழ்வுகளை செய்கிறாள். ஓவியாவின்  இந்த அற்புதத்தையே விழாவில் கலை நிகழ்ச்சியாக நடத்தலாம் என நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா உதவுகிறார். இவர்களின் அற்புதத்தை பார்த்து அதன் ஒரு பொருளைத் திருடி மறைத்து வைக்கிறான் ஒருவன். அந்த அற்புத பொருளை தேடும் பயணத்தில் பெற்ற அனுபவங்கள். கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதா ?, அதில் அந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டதா ? என்பதை மெல்ல மெல்ல ஒற்றைச் சிறகு ஓவியாவோடு நம்மை பறக்க செய்திருக்கிறார். அற்புதங்களைக் கண்டு பிடிக்க ஒவ்வொருவரின் கனவுக்குள் சென்று அதன் ரகசியங்களை தேடுவது, குழந்தைகள் சந்திக்கும் சிறுசிறு பிரச்சனைகள், அவர்கள் எதிர்கொள்வதும் சவால்கள், அவர்களின் நுட்பமான அறிவும், மிக முக்கியமான ஒரு அரசியல் பிரச்சினையை குழந்தைகளை வைத்து, அதுவும் குழந்தைகள் கதையில் சொல்லி இருப்பது ஆசிரியரின் தனி சிறப்பு. ஒரு ஃபேண்டசி கதைகளில் ஒரு முக்கியமான அரசியல் பிரச்சனையை, விழிப்புணர்வோடு கூறியிருக்கும் Vishnupuram Saravanan ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள். 
ஒரு அற்புத பொருளை கண்டுபிடிக்க சென்ற இடத்தில் நிலத்தில் மண்புழு இல்லை என்றும்,இன்னொன்றை கண்டறிய போகும் இடத்தில் நீரின் தன்மை மஞ்சள் நிறமாக வருகிறது என சமூகத்தை கதையோடு ஒன்ற வைத்து கூறியிருப்பது சிறப்பு. இயற்கையின் சுரண்டலுக்கு எதிராக போராடுபவர்களை அவர்களின் பெயர்களை வைத்து நான்காவது அற்புத பொருளை கண்டுபிடிப்பதும், அந்த ரகசியம் போராடுபவர்கள் 12 பேரின் பெயரின் முதல் எழுத்தை வைத்து ரகசியத்தை கண்டுபிடிப்பது, இறுதியில் கலெக்டர் முன்னிலையில் அவர்கள் செய்வதும் என நம்மை ஒற்றை சிறகு அணிய வைத்து கதைக்குள் பறக்க விட்டிருக்கிறார்.110 பக்கம் விறுவிறுப்பான பயணம். குழந்தைகள் உலகில் பறவை போல் சுற்றித்திரிந்த அனுபவம்.
குழந்தைகள் வாசிக்க பரிந்துரைக்கும் புத்தகம்.


கார்த்திக் கிருபாகரன்

Comments

Popular posts from this blog

ஆலமரம்