சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்




      3 ஆண்டுகளாக இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.பல புத்தக கடைகளில் கிடைக்கவில்லை,googleல் பலரின் இந்த புத்தகம் பற்றிய கருத்துகளை பார்த்த போது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.ஒரு வழியாக சென்னையில் புத்தகத்தை வாங்கி படித்தேன்.3 ஆண்டு ஆர்வம் புத்தகம் படிக்கும் போதே கதையோடு ஓன்ற வைத்தது,1970 ல் எழுதிய அக்னி பிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்கள் என பெயர் மாற்றமாக வெளியாகி உள்ளது.

பதினாறு வயதுடைய பர்பன பெண்ணான கங்கா ஒரு மாலை பொழுதில் கல்லூரி முடிந்து வரும் வழியில்  யாரென்று தெரியாத ஒரு நபரால் தனது சுய நினைவை இழந்து தனது கற்பை பறி கொடுகிறாள்.உடை கிழிந்த கோலத்தில் தன்னையே இழந்து வீட்டிற்கு வந்து தாய் கனகத்திடம் குழந்தை போல விஷயத்தை கூறி அழுகிறாள்.தலையில் இடி விழுந்தது போல் மனகுமுறால் கதற,ஊரரால் தூற்றபட்டு அண்ணன் கணேசன் அம்மா,கங்கா வை துரத்தி விடுகிறான்.மாமா வெங்குடு ஆதரவில் வளர்கிறார்.குற்ற உணர்வு, வேறு வாழ்க்கையை தேடி கொள்ளாமல் தன் தாயுடன் தனிமையில் வாழ பழகுகிறாள்.12 ஆண்டு கடந்து செல்கிறது.ஆதரவு தருபவர் சும்மாவ தருவார். வெங்குடு தப்பான கோணத்தில் கங்காவை அனுகுவதும்,செய்த தவறை குத்திகாட்டியும் புண்படுத்துகிறார்.ஒரு கட்டத்தில் வேலைக்கு செல்லும்போது ஒரு நாவல் ஒன்றை படிக்கிறாள். அதில் இவள் வாழ்க்கையில் நடந்த கதை போன்று இருப்பதை பார்கிறாள்.ஆனால் அந்த கதையில் அவள் கற்பை இழந்தது தாயால் மறைக்கபடுவது போன்று உருவாக்கபட்டு இருக்கிறது.அப்போது அவள் மாமா வெங்குடு கூறியதை சிந்திக்கிறாள்.தன் நிலைமை இப்படி மாற காரணமாக இருந்த அந்த யாரென்று தெரியாத மனிதனை தேட நினைக்கிறாள்.படித்த புத்தகத்திற்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் எழுதியவன் யார்? , அவனை சந்தித்த பிறகு இவள் சூழ்நிலை மாறியதா ? அவன் வாழ்க்கை எப்படி? என நாவலின் கதை சுவாரசியம் மிகுந்து உள்ளது. 
பெண்ணின் கதை... பெண்ணியம் பற்றி பெண் எழுத்தாளர் எழுதியதை விட எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இருப்பது சிறப்பு.அதிலும் 70 காலகட்டத்தில் சர்ச்சை குறிய நாவலாக இது இருந்திருக்கும்.3 ஆண்டாக இந்த புத்தகம் படிக்க இருந்த ஆர்வம்.படித்த பின் நிறைவாக இருந்தது.
My favourite writer  ஜெயகாந்தன் என்று சொல்லுவேன்.அவரின் படைப்புகளில் மிகவும் பிடித்தது குருபீடம்,யாருக்காக அழுதான்.இனி  My Close to my heart book என சொல்லும் அளவிற்கு சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலும் உண்டு. இது பெரும் தாக்கத்தை எற்படுத்திவிட்டது.முந்தைய காலகட்டத்திற்கும் இந்த கதை பொருந்தும்
இன்னறய காலகட்டத்திற்கும் இந்த கதை பொருந்தும். அடுத்து வர தலைமுறைக்கும் இது பொருந்தும். கிளாசிக் Story ... 
காந்தி கண்ட பெண் விடுதலை சமூகம் உருவாகும் போது இது பழைய புத்தகமாகும்.இன்றைய சமூக சீரழிவு பாலியல் கொடுமையால் சிலர் தனக்கு நடந்த கொடுமையை மறைத்து சமூகத்தில் வேறு வாழ்க்கை வாழ்கிறார்கள்.சிலர் காதல் பெயரில் தவறுகள் செய்கிறார்கள்.மேலை நாட்டு கலச்சாரத்தால்  சமூக சீரழிவு சாதரணமாக நடக்கிறது.கலாச்சார சீரழிவு குறைய வேண்டுமெனில் நம்மை நாமே நிலைபடுத்தி சரியான வழியில் பயணிக்க வேண்டும்.
வாழ்வில் எதாவது ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பெண்ணியம் பற்றிய இந்த புத்தகம் படிக்கலாம் என்பது என் கருத்து.வாய்ப்பு  கிடைத்தால் வாங்கி படியுங்கள்.

                        
   
கார்த்திக் கிருபாகரன்

Comments

Popular posts from this blog

ஆலமரம்