எங்கதெ


       

வில்லிபுத்திர ஆழ்வார் எழுதிய மகாபாரதத்தில ஒரு வார்த்தை வரும்... "கணவனை இழந்த  அழகான மனைவி. இந்த சமுதாயத்தில் வாழ்வது, 'தோல் உரிக்கப்பட்ட மாமிசத்தை பருந்துகளிடமிருந்து காப்பது' போன்று", ஆனால் இந்த கதைபடி பருந்து மாமிசத்துக்கு ஆசைபட்டு மாட்டி வாழ்வை இழப்பது போன்ற கரு.
ஆசிரியர் இமையம் அவர்களின் முந்தைய நாவல்,கதைகள் நான் புரட்டியதில்லை.அவரின் இந்த நாவல் எனக்கு புதிதுதான். இந்த நாவலில் முதல் பக்கம் வாசிக்கும் போதே கதையின் கரு தெரிஞ்சிடும். ஆனால் முழுமையாக படிக்காமல் புத்தகத்தை மூடி வைக்க முடியாது. புறக்கணிக்கவும் முடியாது. அவரின் எழுத்துக்கள் நம்மை 110 பக்கமும் பயணிக்க வைக்கும்.
ஊருக்குள்ள இட்டுக்கட்டி பேசறதும், கதை முழுக்க ஒரு தனிமனிதனின் புலம்பல். ஆனா அந்த புலம்பலை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த புலம்பல் நம்மை மேலும் மேலும் கதையில் பயணிக்க வைக்கிறது.
சிக்கலான வார்த்தைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இல்லை. இழிவான வார்த்தைகள் என்று ஒதுக்கும் அளவுக்கும் இல்லை. முழுவதுமாக வாசிச்சது அப்பறம் கதையின் கரு மட்டும் மனசில நிற்கும். அதுதான் இந்த லேசான எழுத்துக்களில் ஆசிரியர் கைவண்ணம்.
ஆண் பெண் உறவின் ஈர்ப்பு நிலை.அது இதுவரை நான் படித்திராத ஒரு புது கரு.
33 வயசாகியும் திருமணமாகாமல் வாழுற விநாயகம். படித்த பட்டதாரியும் கூட. அந்த ஊருக்கு கணவனை இழந்த கைம்பொன் கமலா. தன் இரண்டு மகளோடு அரசு வேலை கிடைச்சு.அந்த ஊர் ஸ்கூல்ல பியூனா வேலைக்கு சேர்கிறாள். உயர் அதிகாரிகள்லிருந்து,  ஊர்க்காரர்கள் வரை பலரும் அவ பின்னால சுத்துறாங்க. அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து குடுக்குறாங்க. ஒருகட்டத்தில விநாயகமும் அவளோடு பேசி பழக ஆரம்பிக்கிறான். ஊர் திருவிழா, சடங்கு, தங்கச்சிங்க கல்யாணம், அம்மா,அப்பா, காடுகரை எல்லாத்தையும் மறந்து கமலா பைத்தியம் பிடிச்சு அலைய  ஆரம்பிக்கிறான். 
ஊர்க்காரர்களும், "கமலா விநாயகத்தின் பிராப்பர்டின்னு"  சொல்லுற அளவுக்கு, அவன் கமலாவோட நெருங்கி பழக ஆரம்பிக்கிறான். உறவும் வைச்சுக்கிறான். தன்னோட வீட்ல இருந்து தங்கச்சிங்க் மூலமா குழம்பு கொடுக்கவும், அவ வீட்டிலிருந்து காய்கறி வாங்கவும், பரிமாற்றம் நடக்குது.
"ஏண்டா ஏற்கனவே அவளுக்கு ரெண்டு புள்ள இருக்குது. அவளைப் போய் பார்க்கிறாயேன்னு"  சொல்லி அவன் தம்பி அட்வைஸ் எல்லாம் பண்னாலும்.
விநாயகம் மனசு கேட்கல, அவன் காலிரண்டு அங்க தான் போச்சு. மனசெல்லாம் "கமலான்னு"  சொல்லுச்சு.
பிரமோஷன் காரணமாக கமலா கிராமத்தை விட்டு நகருக்கு போறா. அப்பப்ப வந்து விநாயகனும் பார்த்துட்டு  போவான்.அவ வீட்டிலயும் தங்கிட்டு போவான். விநாயகத்தை போல நகரில் வாழுற கமலாவோட உயர் அதிகாரியும் கமலா மேல பைத்தியமா இருக்காரு. கமலா வீட்டுக்கு வந்து, போய்ட்டு இருக்காரு. பல உதவிகளையும் செய்றாரு.
கிராம வாழ்க்கை வேறு, நகர வாழ்க்கை வேறு அதுவும் கிராமத்துல விநாயகம் பிராப்பர்ட்டியா இருந்த கமலா. நகரத்துல பொது பிராப்பர்ட்டி ஆகிட்டா.
43 வயசாகி போன விநாயகத்துக்கு அப்பறமா புத்தியில பட்டது.
10 வருடமா கமலா மேல பைத்தியமா இருந்து,அவள கொல்லவும் முடியாம,தனக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சுகவும் முடியாம,சாகவும் முடியாம கடைசியா கொலை வந்துட்டு, அவளை விட்டு விலகுறதோட கதையும் முடிவு வரும்.
இந்த நாவல்ல "பாவாடைன்னு" ஒரு கேரக்டரை சொல்லி இருப்பாரு. அவன் விநாயகத்துக்கு முன்னோடியாய் இருக்கிறதா சொல்லி இருப்பாரு. இந்தத் தலைமுறையில பாவாடைக்கு அடுத்தபடியா விநாயகம் இருக்கிறதா சுட்டிக்காட்டி இருப்பாரு. "விநாயகத்துக்கு அடுத்தபடியா, அதாவது அடுத்த தலைமுறையில யாரு இருக்கப் போறாங்க அப்படின்னு" ஒரு எச்சரிக்கைய கதையில சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
ஆண்,பெண் சிக்கலான உறவு பத்தி நியூஸ்ல, தினம் ஒரு செய்தி மாதிரி பார்த்தாலும்.
பெரும்பாலும் இந்த மாதிரி உறவுகள் முடிவு இறப்பா இருந்தாலும்,அத விட்டு வெளிவர முடிவு பண்ணி போற மாதிரி நாவல் முடிச்சிருக்கது. சிறப்பு தான்...
கார்த்திக் கிருபாகரன்


Comments

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்