Posts

Showing posts from November, 2020

தீராக் காதல் ...

Image
பிரிந்த காதலின் வலியின் பதிவுகள் காதலித்தவர்கள்,காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலில் தோற்றவர்கள், முக்கியமாக ஒருதலையாக காதலித்தவர்கள்  என அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறுகதைத் தொகுப்பு. "தீராக்காதல்"  சொல்ல முயற்சித்து, சொல்லாமலே  சிறகு ஒடிந்த காதல் அது. தோற்றுப் போன காதலின் துயரங்களை அழுத்தமாக பதிவு செய்யும் சிறந்த சிறுகதை தொகுப்பு, எல்லோராலும் உணரக்கூடிய தருணங்கள்... ஆசிரியர் G.r. Surendarnath  இரண்டு விஷயங்களில் முதன்மையாக தெரிகிறார். ஒன்று விருவிருப்பு,இன்னொன்று கதைக்களம்.பிரிந்த காதலின் தீரா வழியின் பதிவுகள்,ஒருதலை காதலின் வலியின் பதிவுகளை தெளிவாக இதில் பதிய வைத்திருக்கிறார். சொல்லிய காதல்,  சொல்லாத காதல், சொல்ல முயற்சித்து சொல்லாமலே சிறகு உடைந்த காதல்  என அனைத்து வழிகளையும் ஒரு சேர சிறுகதையில் வெவ்வேறு கதைகளின் மூலம் தெரிவித்திருக்கிறார்.நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார். ஆண்கள் காதலில் தோற்றுவிட்டால் கவிதை எழுதுவார்கள், காதலில் தோற்ற கதையை சினிமாவாக எடுப்பார்கள், சிலர் மது பழக்கத்திற்கு அடிமை ஆவார்கள், நண்பர்களிடம் தன் காதலியை பற்றி தவறாக பேசி குடிப்பார்கள் சிலர் சி

அர்த்தமுள்ள இந்து மதம்

Image
  இரண்டு பாகங்கள் நிறைவுடன் என் வாசிப்பனுபவமும்,என் கருத்தும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் செய்யும் நன்மைகள், அதனால் அவர்களுக்கு என்ன பலன் தருகின்றது. செய்யும் தீமைகளால் அவர்களுக்கு ஏற்படும் பலன்களை நிகழ்வுகள் அடிப்படையில் முதல் இரண்டு பாகத்தில் பாகத்தில் கூறுகிறார். "திருவள்ளுவர் ஒரு ஹிந்துவே.ஏனெனில் அவர் குறளில் 'ஆதிபகவன்' என்கிறார்.அப்படி செல்பவர்கள் ஹிந்து.அதனால் அவரும் ஹிந்து" என்று ஆசிரியர் கூறியுள்ளார். திருவள்ளுவர் காலத்தில் ஹிந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் என்கிற மதங்களே இல்லை. புராணங்களிலும் இதிகாசங்களிலும் எதிலுமே ஹிந்து மதம் அப்படி ஒன்று இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. முதலில் இந்துக்கள் யார் ? என எனக்கு தெரிந்த சிறு விளக்கம். "1790 ஆங்கிலேயர்களால் இட்ட பெயர்தான் ஹிந்து. வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயர்தான் ஹிந்து என்ற பெயரையே கொடுத்தவர். சைவம், வைணவம், சமணம் என இருந்த அனைத்தையும் சிந்து நதிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள் ஹிந்து மக்கள் 'ஹிந்து' என்றனர். இதுவே ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்டது. நான்கு தொழிலால் பிரிக்க பட்டவர்கள். இப்போது ஜாத

துணையெழுத்து

Image
 ஒரு புத்தகம் அதற்கான வாசகர்களை தேடிக் கொள்கிறது. துணையெழுத்து புத்தகமும் அதுபோலதான். ஒரு சிறிய அத்தியாயத்தை படித்து முடித்த பிறகு அந்த முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.புத்தக கடையில் அலமாரி வரிசையில் ஆர்வமாக  தேடி எடுத்தேன். எஸ்.ராமகிருஷ்ணன்(S.Ramakrishnan) துணையெழுத்து . நீண்ட நெடும் பயணம் செய்தவர்கள். இளைப்பாற ஒர் இடம் தேடிக் கொள்வது போல இருக்கிறது இந்த புத்தகம் வாசித்த பின்பு. நம் வாழ்வில் நடக்கும் சர்வசாதரணமாக  நிகழ்வுகளை எழுத்துக்களில் எடுத்துரைத்த விதம் அருமை. இந்த உலகை எழுத்தாளர்களின் கண் வழியே அவர்கள் எழுதிய புத்தகத்தில் நாம் காணலாம். ஒரு அனுபவத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக கூறுவது எழுத்தாளர்களுக்கே உரிய தனிச்சிறப்பு. அது எழுத்தாளர் எஸ்.ராவின் தனிச்சிறப்பும். அவரின் அனுபவங்கள் அனைத்தும் நம் வாழ்வில் நடப்பது போலவும் நம் வாழ்வை ஒட்டிய நிகழ்வாகவும் அமைகின்றன. பள்ளி பருவ காதல், சில பயணங்கள், சில மறக்க முடியாத நிகழ்வுகள், சில துன்பங்கள், சில அவமானங்கள், பல வெற்றிகள் என நம் வாழ்வை ஒட்டியே அனுபவங்களை வாசித்ததாகவே உள்ளது. அவற்றை அவர் சொல்லிய விதம் மிகுந்த சுவாரசியத

தீபாவளி(லி)

Image
  தீபாவளி(லி) தீபாவளி பண்டிகை வந்தாலே மனசுக்கு தனி சந்தோஷம்தான். அதுவும் பக்கத்தில் இருக்குற துபாய் வீட்டுக்காரங்க நிறைய வெடி வாங்கி ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தெருக்களில் வெடி வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க.வெடித்து சிதறும் பட்டாஸ்கள்,பொங்கி எழும் கலர் புஸ்வாணங்கள்,வண்ண வண்ண மத்தாப்புகள்,சுழலும் சங்கு சக்கரங்கள்,கலர் கலர் வாணவெடிகள்,அணுகுண்டுகள் என்று துபாய் குடும்பம் வெடி வெடிச்சு ஆனந்தமடைவாங்க.வழக்கமா அதை வேடிக்கை பார்ப்பதே எங்களுக்கு ஆனந்தம். சிறு வயதில் ஒவ்வொரு ஆண்டு தீபாவளியை எதிர் நோக்கி காத்திருப்பேன். ஏன்னா! 'அப்பதான் வீட்டில் செய்யும் மொறு மொறு காரமுறுக்கு, இனிப்பான அதிரசம்,சுத்து முறுக்கு,குலோப் ஜாமுன்' என பல பலகார வகைகள் சாப்பிட முடியும். புதுதுணிமணிகள் வாங்கி உடுத்த முடியும். சந்தோஷமாக நண்பர்களுடனும், பக்கத்து வீட்டாருடனும் சேர்ந்து வெடி வெடித்துக் கொண்டாட முடியும். ஆனால் தீபாவளி நெருங்க,நெருங்க ஏதாவது நெருக்கடியான சூழலால் ஒரு சந்தோஷம் மட்டும் விட்டுக் கொண்டே இருக்கும். அது வெடி கிடைக்காத சூழலல். குடும்பத்தில் இருக்கின்றவர்கள் எல்லாரும் சம்பாதிச்சாலும், அந்த தீபா

தண்ணீர் தண்ணீர்

Image
  அரசியல்வாதிகளை பகைத்து கொள்கிற, அரசு அதிகாரிகள் நிறைய பேரை, "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு" சொல்லி பயமுறுத்துவார்கள். அந்த தண்ணி இல்லாத காடுகளில் ஒன்றுதான் எங்க ஊர் மணப்பாறை .  குடகிலே பிறந்து வரும் காவிரி, பாய்ந்து செல்கின்ற பாதையெல்லாம் பொன் விளையும் பூமியாக மாறும்.அப்படி அகண்ட காவிரிக்கரையில், குடிக்கொண்ட அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ள,வளம் செழிக்கின்ற திருச்சி மாவட்டத்தில் இருக்கிற எங்க ஊர் மிக முக்கிய ஒரு நகராட்சி. தமிழ்நாட்டுக்கு மத்தியில் தான் இருக்கும் திருச்சி மாவட்டத்துக்கு மத்தியில் தான் மணப்பாறை இருக்கு. திருச்சியிலிருந்து 35 கிலோ மீட்டர் பயணதூரம். ஆனால் இங்க நிறைய தண்ணீர் பஞ்சம் இருக்கு. "மணப்பாறையில் இருந்து பொண்ணு எடுப்பார்கள். ஆனால்  பொன்னு கட்டி கொடுக்கமாட்டாங்க" என்பார்கள். காரணம் தண்ணீர் பஞ்சம்.1975 காலகட்டத்தில் இரயில்களை நிறுத்தி,அதிலிருந்து தண்ணீர் எடுக்கும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைத்துள்ளது. அதனாலே,வீட்டில் தண்ணீரை வீணாக்கினால் கோபம் ஏற்படும். மணப்பாறையில் அரசாங்கம் நிறைய திட்டங்கள் கொண்டு வந்து வீடு,வீட்டுக்கு க