தீராக் காதல் ...

பிரிந்த காதலின் வலியின் பதிவுகள்


காதலித்தவர்கள்,காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலில் தோற்றவர்கள், முக்கியமாக ஒருதலையாக காதலித்தவர்கள்  என அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறுகதைத் தொகுப்பு.


"தீராக்காதல்"


 சொல்ல முயற்சித்து, சொல்லாமலே 


சிறகு ஒடிந்த காதல் அது.


தோற்றுப் போன காதலின் துயரங்களை அழுத்தமாக பதிவு செய்யும் சிறந்த சிறுகதை தொகுப்பு, எல்லோராலும் உணரக்கூடிய தருணங்கள்...



ஆசிரியர் G.r. Surendarnath  இரண்டு விஷயங்களில் முதன்மையாக தெரிகிறார். ஒன்று விருவிருப்பு,இன்னொன்று கதைக்களம்.பிரிந்த காதலின் தீரா வழியின் பதிவுகள்,ஒருதலை காதலின் வலியின் பதிவுகளை தெளிவாக இதில் பதிய வைத்திருக்கிறார்.


சொல்லிய காதல்,


 சொல்லாத காதல்,


சொல்ல முயற்சித்து சொல்லாமலே சிறகு உடைந்த காதல் 


என அனைத்து வழிகளையும் ஒரு சேர சிறுகதையில் வெவ்வேறு கதைகளின் மூலம் தெரிவித்திருக்கிறார்.நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.


ஆண்கள் காதலில் தோற்றுவிட்டால் கவிதை எழுதுவார்கள், காதலில் தோற்ற கதையை சினிமாவாக எடுப்பார்கள், சிலர் மது பழக்கத்திற்கு அடிமை ஆவார்கள், நண்பர்களிடம் தன் காதலியை பற்றி தவறாக பேசி குடிப்பார்கள் சிலர் சில நண்பர்களிடம் தன் காதலியைப் பற்றி தவறாகப் பேசுவார்கள், தாடி வளர்ப்பார்கள், சோகப்பாடல் கேட்பார்கள்.ஆனால் பெண்களுக்கு காதல் தோல்வி வலி இல்லை என்று நினைப்பார்கள். ஆனால், அது தவறு அவர்களுக்கும் காதல் வலி தெரியும்.பெண்ணிற்கும் காதல் தோல்வி உண்டு


ஆனாலும், இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ...!


இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில்...!


இவள் சோகத்தை மறந்ததில்லை கானா 


மெட்டுக்கள் பாடி..!


இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று...!


இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக் கூசும் விமர்சனங்களை...!


இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது


எல்லாம் வெறும் 


“தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல் தன்னை வருத்துவது'' ம் மட்டுமே...!!!


சரி, காதல் தோல்வி எப்படி ஏற்படுகிறது..!!


மனதிற்கு பிடிக்காமல் பிரிகிறார்கள், இன்னொன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகிறார்கள், குடும்ப சூழ்நிலைகளாலும் பிரிகிறார்கள், குடும்பத்திற்கு பிடிக்காமலும் பிரிகிறார்கள், ஜாதிமத இன வேறுபாட்டாலும் பிரிகிறார்கள்,


இதில் நிறைய காதலுக்கு ஜாதி மத பாகுபாடு முக்கிய காரணமாக அமைகிறது.


காதலித்து பிரிந்தவர்கள் வெகு நாட்களுக்கு பிறகு எங்கேயோ ஒரு நாள் சந்திக்கும் போது அவர்கள் இருவரின் பார்வை,அந்த மனவலி, சொல்ல  வார்த்தைகள் இல்லை.


இந்த காலத்து காதலை நான் முன்வைக்கவில்லை.நான் சொல்வது 20ம் நூற்றாண்டு  காலத்து காதல்.உண்மையான காதல் பள்ளிப் பருவத்திலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, அது மிக அழகான காதல்.


புத்தகத்தை படித்து,முதல் காதலையும் நினைவு கொண்டுவந்து தவித்திருக்கிறேன். இப்போது முதல் காதல் வலியை  நினைத்து கொண்டே இந்த புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் வைரமுத்துவின் பாடல் வரி மனதில் ஒலிக்கும்...


" வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் 


கையில் சேரவில்லை 


காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை"


சுகமான வலிகள்தான்


காதலும் கடந்து போகும்...


கார்த்திக் கிருபாகரன்


Comments

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்