அர்த்தமுள்ள இந்து மதம்

 


இரண்டு பாகங்கள் நிறைவுடன் என் வாசிப்பனுபவமும்,என் கருத்தும்.


மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் செய்யும் நன்மைகள், அதனால் அவர்களுக்கு என்ன பலன் தருகின்றது. செய்யும் தீமைகளால் அவர்களுக்கு ஏற்படும் பலன்களை நிகழ்வுகள் அடிப்படையில் முதல் இரண்டு பாகத்தில் பாகத்தில் கூறுகிறார்.




"திருவள்ளுவர் ஒரு ஹிந்துவே.ஏனெனில் அவர் குறளில் 'ஆதிபகவன்' என்கிறார்.அப்படி செல்பவர்கள் ஹிந்து.அதனால் அவரும் ஹிந்து" என்று ஆசிரியர் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் காலத்தில் ஹிந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் என்கிற மதங்களே இல்லை.

புராணங்களிலும் இதிகாசங்களிலும் எதிலுமே ஹிந்து மதம் அப்படி ஒன்று இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.

முதலில் இந்துக்கள் யார் ? என எனக்கு தெரிந்த சிறு விளக்கம்.

"1790 ஆங்கிலேயர்களால் இட்ட பெயர்தான் ஹிந்து.

வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயர்தான் ஹிந்து என்ற பெயரையே கொடுத்தவர்.

சைவம், வைணவம், சமணம் என இருந்த அனைத்தையும் சிந்து நதிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள் ஹிந்து மக்கள் 'ஹிந்து' என்றனர். இதுவே ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்டது. நான்கு தொழிலால் பிரிக்க பட்டவர்கள். இப்போது ஜாதியால் பிரிக்கப்பட்டனர்."

ஹிந்து மதம் ஒரு மதமே கிடையாது, அது ஒரு வாழ்வியல். 

ஹிந்து மதம் மட்டுமே எல்லாருக்கும் ஆனா மதமாக இருக்க முடியும். ஒருவர் நாத்தீகவாதியாகவும், ஹிந்துவாகவும் இருக்க முடியும். ஒருவர் கிறிஸ்துவர் ஆகவும் ஹிந்து ஆகவும், இஸ்லாமியர் ஆகவும் ஹிந்துவாகவும் , பௌத்த மதத்தினர் ஆகவும் ஹிந்து வாகவும் இருக்கலாம்.

இவளவு என் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாமல் ஹிந்துவாக இருக்க முடியும். ஹிந்து மதம் இலட்சியத்தை மட்டுமே இலக்காக வைத்து கொண்டு நகரும் ஒரு மதம், மார்க்கம் நல்லதாக மட்டும் இருந்தால் போதும் எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.ஆங்கிலத்தில் All Road Leads to ROME என்பார்கள், அது போலவே, கடவுளை அடைவது மட்டுமே லட்சியம் மார்கத்தை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். கடவுளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வர்ணித்து கொள்ளுங்கள். நல்லதை மட்டும் சிந்தித்து செயல்படுங்கள்.

ஒருமுறை ஆசிரியர் கண்ணதாசன் அவர்களிடம் ஒருவர் பேட்டி எடுக்கிறார். "நீங்கள் இந்து மதத்தை உயர்வாக கூறுகிறீர்களே! அப்படி என்றால் மற்ற மதங்கள் தாழ்வா?" என்று. அதற்கு அவர்,"என் மனைவி அழகானவள், அடக்கமானவள், அன்பானவள். அதற்காக மற்றவர் மனைவி அழகில்லை என்று சொல்லவில்லை. என் மனைவியைப் பற்றி நான் உயர்வாக சொல்லகூடாதா" என்று விளக்கம் அளித்தார்.

சரிதான் மதத்துக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு என்று மறைகிறதோ அன்று நாம் உரக்க உயர்வாக பேசலாம் என்பது என் கருத்து.


திருப்பதிக்குப் போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.


நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி வந்தால் அப்போது நிம்மதி இருக்காது. மீன் கூடைக்குப் பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது; பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவெறுப்பே தோன்றும். நண்பன் தீயவன் என்றால், விலகிவிடு; நல்லவன் என்றால் நம்பிவிடு.


விலகியவனை நம்பத் தொடங்காதே; நம்பியவனை விலக்கத் தொடங்காதே. ‘இன்றையப் பொழுது நன்றாக இருக்கும்’ என்று நம்பு; நன்றாகவே இருக்கும்.


திருநீறோ, திருமண்ணோ இடும்போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும் வரை மூளை பிரகாசிக்கும். நம்பியவர் கெட்டாரா? நம்பாதவர் வாழ்ந்தாரா? 

என்பதே ஆசிரியர் கண்ணதாசன் அவர்களின் கருத்து. 


 "கடவுளை பார்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்" என்று ஒரு நிருபர் பெரியாரிடம் கேட்டார்.

 "ஆம் கடவுள் இருக்கிறார்" என்று ஏற்றுக் கொள்வேன் என்றார் பெரியார். 

இதேபோல்தான் 'நம்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள். நம்ப வில்லை என்றால் விட்டுவிடுங்கள்.'


பக்திக்கும், ஆன்மிகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இங்கு பல நேரங்களில் பக்தி முத்தி போய் நடக்கவும், சாப்பிடவும், தூங்கவும் சகுனம் பார்க்கும் நிலை வந்துவிட்டது.

பக்தி வேறு, ஆன்மீகம் வேறு

நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.

மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஆன்மீகம்.


கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் "அனைத்துமே கடவுளாக இருக்கிறார்" என்று பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.இதுதான் ஆன்மீகம்.


கார்த்திக் கிருபாகரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்