துணையெழுத்து

 ஒரு புத்தகம் அதற்கான வாசகர்களை தேடிக் கொள்கிறது.

துணையெழுத்து புத்தகமும் அதுபோலதான். ஒரு சிறிய அத்தியாயத்தை படித்து முடித்த பிறகு அந்த முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.புத்தக கடையில் அலமாரி வரிசையில் ஆர்வமாக  தேடி எடுத்தேன்.

எஸ்.ராமகிருஷ்ணன்(S.Ramakrishnan) துணையெழுத்து.



நீண்ட நெடும் பயணம் செய்தவர்கள். இளைப்பாற ஒர் இடம் தேடிக் கொள்வது போல இருக்கிறது இந்த புத்தகம் வாசித்த பின்பு.

நம் வாழ்வில் நடக்கும் சர்வசாதரணமாக  நிகழ்வுகளை எழுத்துக்களில் எடுத்துரைத்த விதம் அருமை. இந்த உலகை எழுத்தாளர்களின் கண் வழியே அவர்கள் எழுதிய புத்தகத்தில் நாம் காணலாம். ஒரு அனுபவத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக கூறுவது எழுத்தாளர்களுக்கே உரிய தனிச்சிறப்பு. அது எழுத்தாளர் எஸ்.ராவின் தனிச்சிறப்பும். அவரின் அனுபவங்கள் அனைத்தும் நம் வாழ்வில் நடப்பது போலவும் நம் வாழ்வை ஒட்டிய நிகழ்வாகவும் அமைகின்றன. பள்ளி பருவ காதல், சில பயணங்கள், சில மறக்க முடியாத நிகழ்வுகள், சில துன்பங்கள், சில அவமானங்கள், பல வெற்றிகள் என நம் வாழ்வை ஒட்டியே அனுபவங்களை வாசித்ததாகவே உள்ளது. அவற்றை அவர் சொல்லிய விதம் மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பயணமும் நம் மறக்கமுடியாத அனுபவத்தை பல கற்றுக் கொடுக்கின்றன. என்பதை இவரின் எழுத்துக்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். 


மொழி தெரியாத பிற மாநிலங்களுக்கு சென்று வாழ்வது சுவாரசியமான ஒன்று.

அங்கேயே தலைமுறையாக வாழ்வதும்,அந்த மொழி பயின்று அதில் புலமை பெறுவது சாமர்த்தியமான ஒன்று.அதிலும் மக்களால் அங்கரிக்கபட்ட மிகச்சிறந்த ஆளுமையாக இருப்பது மிக சிறப்பான ஒன்று.அந்த ஆளுமைகளின் அனுபவங்கள்,வாழ்க்கை நமக்கு கானல்நீராக தான் தெரிகிறது.இன்றைய சூழல் மொழி,இனம் கடந்து புத்தகங்களை வாசித்தும், எழுத்தாளர்களை கொண்டாடியும் வருகிறார்கள்.


வாழ்வில் நடந்த அனுபவத்தை கூறுவதற்கும், உண்மையை கூறுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

எஸ்.ரா மிகச்சிறந்த எழுத்தாளர் என கூறுவதை விட, சிறந்த பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். அவரின் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

இந்த நூலை வாசித்த பிறகு தான் உலகம் பற்றிய ஒரு பார்வை எனக்குள் விரிகிறது. அண்டையில் இருப்பவரோடும்,சக மனிதனோடு பல அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது.

புத்தகம் வாசிப்பின் பிறகு தான் நீண்ட நெடிய பயணங்கள் செய்ய ஆர்வம் உள்ளது. பயணங்களைப் பற்றி சில குறிப்புகள் எழுத ஆவலாக உள்ளது. வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி விவரிக்க தோன்றுகிறது.இரண்டு அனுபவத்தை பகிர்ந்து,தொடர்ந்து எழுதுகிறேன். இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.


கார்த்திக் கிருபாகரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்