ஆன்டன் செகாவ் சிறுகதைகள்

ஆன்டன் செகாவ் சிறுகதைகள் ஒரு அழகான கிராமம், ஒரு தனிப்பட்ட தேசம், அப்படி இப்படி என ஒரு அலட்டல் இல்லாத கதைகளம். உப்புச்சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை இவ்வளவு சுவாரசியமாக எந்த எழுத்தாளராலும் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் செகாவ் தனக்கேயுரிய மாறுபட்டக் கோணத்தில் அணுகியிருப்பதை அவருடைய கதைகளில் அறியலாம். செக்காவின் கதையுலகில் உள்ள மனிதர்கள், நம்மைப் போல் சராசரியானவர்கள்.அவர்கள் விசித்திரமானவர்கள், வினோதமானவர்கள்.சமூகத்தில் வாழும் சில விளம்பர பிரியர்களை போல் இல்லாமல் தனிமையில் வாழ்பவர்கள். வெளியில் புலப்படாத மனித மனத்தின் நற்குணங்கள், பலவீனங்கள், கசடுகள், வன்மங்கள், ஏக்கங்கள், துயரங்கள், எதிர்பார்ப்புகள் எனப் பல்வேறு அம்சங்களை கதையில் விவரிப்பதுடன் மனிதனின் கீழ்மைப் பண்புகளுக்குக் காரணமான சமூகத்தை விமர்சிக்கவும் தயங்குவதில்லை. செகாவின் கதைகளை வாசிப்பவர், ஏதாவது ஒரு கட்டத்தில் தனக்குள்ளாகவோ, தன்னை மீறி வாய்விட்டோ சிரித்துவிடுவர். ஏனெனில், செகாவின் எழுத்து நடையில், நகைச்சுவை இயல்பாகக் கலந்திருக்கும். தன் கர...