வெண்ணிற இரவுகள்
வெண்ணிற இரவுகள் பகலின் நீளம் கூடுகிறது. இரவின் நீளம் குறைகிறது. காரணம் காதல் மட்டுமே. நான்கு நாள் இரவு, ஒரு பகலில் நடக்கும் இந்தக் காதல் போராட்டம்தான் கதை. இரண்டு நபர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறான தளங்களில் வாழும் இரண்டு நபர்கள். இதில் கதாநாயகன் பெயரை கடைசிவரை குறிப்பிடவே இல்லை. ஆனால் கதை சொல்பவன் அவனே. அவனோ கனவு உலகத்திலேயே வாழும் கனவுலகவாதி. கதாநாயகியின் பெயர் நாஸ்தென்கா. அவளோ தன் பாட்டியின் கண்டிப்பில் வளர்க்கிறாள். அந்தப் பாட்டி தன் ஆடையோடு அவள் ஆடையையும் சேர்த்து ஊக்கு குத்தி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தன் பிணைப்பில் அவளையும் வாழ வைக்கிறாள்.அதுவும் 15 வருட காலமாகவே. முதல்நாள் இரவில் கதாநாயகனும், நாஸ்தென்காவும் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் மனம் விட்டு பேசுகிறார்கள். அவளை சந்தித்ததில் ஆனந்தக் கூத்தாடினான்.தன் கனவுலக கதையை அவளிடம் சொல்கிறான். முதல்நாள் சந்திப்பில் இரவுகள் நீளம் குறைந்தது அவனால் உணர முடிந்தது. இரண்டாம் நாள் சந்திப்பு தொடர்ந்தது அப்போது நாஸ்தென்கா தன்னுடைய வாழ்க்கை கதையை அவனிடம் சொன்னாள். தன் சுகபோக இன்பங்களை யார