ஒற்றை சிறகு ஓவியா

ஒற்றை சிறகு ஓவியா - விஷ்ணுபுரம் சரவணன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவிற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்போது தான் அணிந்திருக்கும் வேஷத்தில் இருந்து ஒவ்வொரு பொருளையும் எடுத்து தன் தோழி ஓவியாவிற்கு அணிந்து விடுகிறார்கள். சிறிது நேரத்தில் ஒற்றைச் சிறகுடன் ஓவியா உருவாகிறாள். அற்புதம் நிகழ்கிறது. அந்த அற்புதத்தின் மூலம் பல நிகழ்வுகளை செய்கிறாள். ஓவியாவின் இந்த அற்புதத்தையே விழாவில் கலை நிகழ்ச்சியாக நடத்தலாம் என நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா உதவுகிறார். இவர்களின் அற்புதத்தை பார்த்து அதன் ஒரு பொருளைத் திருடி மறைத்து வைக்கிறான் ஒருவன். அந்த அற்புத பொருளை தேடும் பயணத்தில் பெற்ற அனுபவங்கள். கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதா ?, அதில் அந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டதா ? என்பதை மெல்ல மெல்ல ஒற்றைச் சிறகு ஓவியாவோடு நம்மை பறக்க செய்திருக்கிறார். அற்புதங்களைக் கண்டு பிடிக்க ஒவ்வொருவரின் கனவுக்குள் சென்று அதன் ரகசியங்களை தேடுவது, குழந்தை...