கருக்கு

பாவப்பட்ட மக்கள் மோட்சத்திற்கு செல்ல வழி காட்டுபவர்களுடன் ஒரு தலித் மகள் வாழ்ந்த கதை. சொந்த மண்ணில்தான் தலித்துகளுக்கு அவமானம் என்று நினைத்து விட வேண்டாம். ஆண்டவனின் பிரதிநிதிகளிடம் அதே கதிதான். இதில் இந்த மதம், அந்த மதம் என்ற வேறுபாடுகள் இல்லை. இதுதான் என்றும் இருக்கிற கொடுமை. இந்த கொடுமையை எதிர்த்த போராட்டமே இந்த கருக்கு. அதில் இந்த கருத்தை துணிச்சலாக உருவெடுத்து பயணித்திருக்கிறது கருக்கு. ஜாதியின் பிடியில் சிக்கி சீரழிந்து சிதைக்கப்பட்ட அவர்களுக்கும், விளிம்பு நிலைக்கு விரட்டப்பட்டவர்களுக்கும் தங்களது வாழ்க்கை பாதையில் மறுபதிப்பு செய்யவும்,சிக்கலை உடைத்தெறிந்து விட்டு தன்மானத்துடன் தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழவும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது இந்த நாவல். ஓரங்கட்டப்பட்ட பல விஷயங்களை சொல்லியிருப்பது இந்த நூலில் அருமை. நாலு பேருக்கு பிரயோக படுற மாதிரி வாழனும். போலித்தனமாக சிரித்துவிட்டு வாழ்வதைவிட,நெசத்துக்கு அழுதுகிட்டு வாழ்வது பரவாயில்லையேன்னு எதர்த்தமா வாழ்வது மேல். இது ஒரு அனுபவக்கதை. ஆனால் இந்த நாவலில் இடம் பெற்ற சாதிய கொடுமைகளின் சுமையைப் பார்க்கும் போது நாவலின் க...